புதன், 6 பிப்ரவரி, 2013
ஜோதிடப் பாடம் 7.
சென்ற பாடத்திலும் அதன் முந்திய பாடங்களிலும் 12 ராசிகளைப் பற்றியும், 9 கிரகிங்களைப் பற்றியும் பார்த்தோம். அதோடு பாதக ஸ்தானைங்களைப் பற்றியும் பார்த்தோம். இனி ஒவ்வொரு லக்னமாகப் பார்க்கலாம்.
இப்போது மேஷ லக்னத்தை எடுத்துக் கொள்வோம். இந்த லக்னத்திற்கு 1, 5, 9ம் வீடுகளான திரிகோண ஸ்தானங்களான மேஷம், சிம்மம், தனுசு ஆகிய வீடுகளுக்கு அதிபதிகள் செவ்வாய், சூரியன், குரு என்ற வியாழ பகவான் ஆகியோர். இங்கே எந்த வீடும் பாதக வீடாக இடம் பெறாததால் இவர்கள் மூவரும் பாதகாதிபதிகள் லிஸ்டில் இடம் பெற மாட்டார்கள். எனவே இவர்கள் மூவரும் ஜாதகத்தில் நன்முறையில் இடம் பெற வேண்டும்.
அதே போல் இந்த லக்னத்திற்கு கேந்திர ஸ்தானங்களான 1, 4, 7, 10ம் வீடுகளாக இடம் பெறுபவை மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய வீடுகள். இவற்றின் அதிபதி கிரகங்கள் செவ்வாய், சந்திரன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள். இவற்றில் சனி பகவான் 10ம் வீடான கேந்திர ஸ்தானத்திற்கு அதிபதி ஆகி சுபர் வரிசையில் இடம் பெற்றாலும் மேஷ லக்னம் சர லக்னமாவதால் இந்த லக்னத்திற்கு 11ம் வீடான லாப ஸ்தானமே பாதக ஸ்தானமாக அமைவதால் சனி பகவான் பாதகராகவே செயல் படுவார்.
ஆக மொத்தத்தில் இந்த மேஷ லக்னத்திற்கு திரிகோண மற்றும் கேந்திர ஸ்தானங்களின் அதிபதி கிரகங்களாக இடம் பெறுபவர்கள் யோகர்கள் ஆவார்கள். கேந்திராதிபதி லிஸ்டில் வரும் சனி பகவான் பாபர் ஆவார். 2ம் வீட்டின் அதிபதி சுபர் அவார். ஆக 2ம் வீட்டு அதிபதியாகவும், 7ம் வீட்டு அதிபதியாகவும் இடம் பெறும் சுக்கிர பகவான் இந்த லக்னக் காரர்களுக்கு சுபராகவும், யோகராகவும் செயல் படுவார். அதே நேரம் 2, 7ம் வீடுகள் மாரக வீடுகளாவதால் இவர் மாரகாதிபதியாகவும் செயல் படுவார். மாரகம் என்றால் மரணம் என்று அர்த்தம். உடனே சுக்கிர திசா காலம் சிறு வயதிலேயே வந்து விட்டால் அவர் சிறு வயதிலேயே அவர் மரணமடைந்து விடுவார் என்று அர்த்தமல்ல. வயதான பிறகு மரணமடையும் தறுவாயில் இவரது அதாவது இந்த சுக்கிர பகவானது ஒத்துழைப்பு இல்லாமல் மரணமடைய முடியாது என்று அர்த்தம்.
இப்போது விஷயத்திற்கு வருவோம். யோகர்களாகவும், சுபர்களாகவும் செயல் படக் கூடிய இந்த கிரகங்கள் ஜாதகத்தில் கெடக் கூடாது. சுபத்துவம் பெற வேண்டும். பாதகாதிபதியாக வரும் சனி பகவான் சுபத்துவம் பெறக் கூடாது. கெட வேண்டும். கெடுவது என்றால் என்ன? சுபத்துவம் என்றால் என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக ஜாதகத்தில் லக்னம் முதல் இடம் பெறும் 12 வீடுகளிலும் 3, 6, 8, 12ம் வீடுகளை மறைவு ஸ்தானங்கள் என்று சொல்வார்கள். இதில் இடம் பெறும் 6ம் வீடு மாத்திரமே முழுமையான மறைவு ஸ்தானம். மறைவு ஸ்தானம் என்றால் கெட்ட வீடு என்று அர்த்தம்.
வீரம், இளைய சகோதரம், வலது காது, பராக்கிரமம், காதில் அணியக் கூடிய பொன் நகைகள், காது, நோய், இசை, துணைவர், ஆளடிமை, தைரியம், தீரச் செயல்கள், மனக் குழப்பம், சித்தப் பிரமை, தெளிவு, கனவுகள், உறவினர்கள், அலைதல், நற்பண்பு, பொழுது போக்கு, உடல் வலிமை, உடல் வளர்ச்சி இவை யாவற்றையும் 3ம் வீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக 6ம் வீட்டிற்கு ருண, ரோக ஸ்தானம் என்று பெயர். கடன், வஞ்சனை, காயம், பசி, எதிரி, நோய், தடை, தாமதங்கள், தாய் மாமன், கொடூரச் செயல், அவதூறு, எதிரியின் மகிழ்ச்சி, எதிரியால் நஷ்டம், யுத்தம், மனக் கவலை, வேதனை, அகால போஜனம், உறவினருடன் கருத்து வேறுபாடு, அனைவராலும் வெறுக்கப் படுதல், சோம்பேறித்தனம், உடல் வீக்கம், களைப்பு, சிக்கனம், அடிமை, கடின உழைப்பு, உட்பகை, பங்காளிகளுடன் வழக்காடுதல், ஆயுத பயம், திருடர்களால் பயம், அரசாங்க சிறைத் தண்டனை ஆகியவற்றை இந்த 6ம் வீட்டின் மூலம் அறியலாம்.
அவமானம், தூக்கம், கொலை, ஆயுள், கலகம், கெட்டபெயர், துன்பம், மரணம், விவகாரம், ஆபத்து, நீடித்த நோய், பண விரையம், வீண் பொழுது போக்கு, எதிர்பாராதது நடைபெறுதல், சொம்பேறித்தனம், பாவச் செயல்களைச் செய்தல், அங்ககீனம், கடும் வேதனை ஆகியவற்றை 8ம் வீட்டின் மூலம் அறியலாம்.
நித்திரை அல்லது நித்திரை பங்கம், மனத் துயரம், மன மகிழ்ச்சி, எதிர்கால பயம் அல்லது வியாதிகளால் பயம் அல்லது விடுதலை, கடன் அடைத்தல், மாட மாளிகைகள், சொத்துக்கள், இடது கண், பொது ஜன விரோதம், அங்ககீனம், வீரம், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், படுக்கை, வேலை நீக்கம், சிறை வாசம், மனக் கொந்தளிப்பு, பொல்லாத்தனம், அற்புதத் தன்மை, எதிர்பாராத பேரிடிகளை சந்தித்தல், வழக்குகளில் வெற்றி அல்லது தோல்வி, மரணம், வெளியூர் அல்லது அந்நிய தேச வாசம், மனைவியின் மரணம், துக்கம், கால்கள், இடது கண், நஷ்டம், இறங்கு முகம், விரையம், உளவாளி, கோள் சொல்தல், கடைசி நாட்கள், வறுமை, பாபங்கள், சயன சுகம் அல்லது சுகமின்மை, காவலில் வைக்கப் படுதல், மோட்சம், இராஜ தண்டனை முதலியவற்றை 12ம் வீட்டின் மூலம் அறியலாம். பொதுவாக 12ம் வீட்டின் மூலம் பண விரையம், கஷ்டங்கள், சிறைவாசம், எதிரி முதலியவற்றை அறியலாம்.
இப்படி இந்த நான்கு வீடுகளும் அதிகமாக கெடு பலன்க்ளைப் பற்றிச் சொல்வதால் இந்த வீடுகளில் பாதகாதிபதியாக வரும் கெட்டவன் கெட்ட வீட்டில் இடம் பெறலாம் என்று சொல்லப் படுகிறது.
1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய வீடுகள் சுப வீடுகள். அதன் அதிபதி கிரகங்கள் சுபர்கள். ஆகையினால் இவர்கள் யாவரும் சுபத்துவம் பெற்று இந்த வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டில் இடம் பெற்றால் நன்மைகளைச் செயவார்கள்.
ஆனால் இதற்கு முன்பு கூறியது போல் 7ம் வீடான களஸ்திர ஸ்தானமும், 9ம் வீடான் பாக்கிய ஸ்தானமும், 11ம் வீடான லாப ஸ்தானமும் அந்தந்த லக்னைங்களப் பொறுத்து பாதக ஸ்தானைங்களாகவும், அதன் அதிபதி கிரகங்கள் பாதக அதிபதிகளாகவும் வருவதற்கு வாய்ப்புண்டு என்பதனால் இவர்கள் கெட்ட வீடுகளான 3, 6, 8, 12ம் வீடுகளில் அல்லது அந்த வீட்டிற்குரிய அதிபதியின் நட்சத்திரங்களில் நின்று கெட்டால் நன்மைகளைச் செய்வார்கள் என்று அர்த்தம்.
ஆனாலும் 3, 8, 12ம் வீடுகளை முழுமையான கெட்ட வீடுகளாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. காரணம் 3ம் வீடு உப ஜெய ஸ்தானமாக இடம் பெறுவதாலும், சகோதரரைப் பற்றிச் சொல்வதாலும், இன்னும் மேலே சொல்லப் பட்ட விஷயங்களைப் பார்த்தால் அதில் சில நல்ல விஷயங்கள் சொல்லப் பட்டிருப்பதாலும், 8ம் வீடு மாங்கல்யம் மற்றும் ஆயுள் பற்றிச் சொல்வதாலும், 12ம் வீடு சுகமான நித்திரைக்கும், நல்ல சாப்பாடிடிற்கும் உரிய வீடாவதாலும் அங்கே இந்த பாதாகதிபதிகள் இடம் பெற்றால் இந்த பலன்கள் பாதிக்கப் படும். ஆகையால்தான் முழுமையான் கெட்ட வீடு என்பது 6ம் வீடு மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
எனவே சுப கிரகங்களாக கருதப் படுபவர்கள் யாவரும் இந்த வீடுகளில் இடம் பெறக் கூடாது. அதே போல் பாவ கிரகங்களாகக் கருதப் படுபவர்கள் சுப வீடுகளில் இடம் பெற்றால் அந்த சுப வீடுகள் கெட்டு அந்த வீடுகளில் இடம் பெற்று இருக்கும் கிரகங்களின் திசா காலங்கள் வரும் போது கெடு பலன்களிச் செய்வார்கள். இனி அடுத்த பாடத்தில் சந்திக்கலாம்.
பாடங்களைப் படிப்பவர்கள் தயவு செய்து தங்களது கருத்துக்களைத் தெரியப் படுத்துனால் நல்லது என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012
ஜோதிடப் பாடம் 6
முதல் 5 பாடங்களிலும் 12 ராசிகளையும், 27 நட்சத்திரங்களையும், மற்றும்
சர, ஸ்திர, உபய ராசிகள் எவை எவை என்றும் பார்த்தோம். மீண்டும் நியாபகப்
படுத்துகிறேன்.
சர ராசிகள் - மேஷம், கடகம், துலாம், மகரம்.
ஸ்திர ராசிகள் - ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்.
உபய ராசிகள் - மிதுனம், கன்னி, தனுசு, மீனம்.
சர ராசியான மேஷம் லக்னமாக வந்தால் அதிலிருந்து 11ம் வீடாகிய லாப ஸ்தானமாகிய கும்ப ராசி பாதக ஸ்தானமாக செயல்படும். இன்னோரு சர ராசியான கடகம் லக்னமாக வந்தால் அதிலிருந்து 11ம் வீடான லாப ஸ்தானமாகிய ரிஷபம் பாதக ஸ்தானமாக செயல்படும். இன்னொரு சர ராசியான துலாம் லக்னமாக வந்தால் அதிலிருந்து 11ம் வீடான லாப ஸ்தானமாகிய சிம்மம் பாதக ஸ்தானமாக செயல்படும். இன்னொரு சர ராசியான மகரம் லக்னமாக வந்தால் அதிலிருந்து 11ம் வீடான லாப ஸ்தானமாகிய விருச்சிகம் பாதக ஸ்தானமாக செயல்படும். இந்த சர லக்னங்களையும் அதன் பாதக ஸ்தானங்களையும் அதன் அதிபதி கிரகைங்களையும் கீழே கொடுத்திருக்கிறேன். அதிபதி கிரகங்கள் என்றால் அந்தந்த வீடுகளின் தலைமைக் கிரகங்கள் என்று அர்த்தம். அந்த கிரகங்கள் அந்த வீடுகளை ஆட்சி செய்கின்றன என்று அர்த்தம்.
சர லக்னங்கள் அதன் பாதக ஸ்தானங்கள் அதன் அதிபதி கிரகம்
--------------------- ------------------------------------- -----------------------------
1. மேஷம் கும்பம் சனி
2. கடகம் ரிஷபம் சுக்கிரன்
3. துலாம் சிம்மம் சூரியன்
4. மகரம் விருச்சிகம் செவ்வாய்
அடுத்து ஸ்திர ராசியான ரிஷபம் லக்னமாக வந்தால் அதிலிருந்து 9ம் வீடான மகரம் பாதக ஸ்தானமாக செயல்படும். இன்னொரு ஸ்திர ராசியான சிம்மம் லக்னமாக வந்தால் அதிலிருந்து 9ம் வீடான மேஷம் பாதக ஸ்தானமாக செயல்படும். இன்னொரு ஸ்திர ராசியான விருச்சிகம் லக்னமாக வந்தால் அதிலிருந்து 9ம் வீடான கடகம் பாதக ஸ்தானமாக செயல்படும். இன்னொரு ஸ்திர ராசியான கும்பம் லக்னமாக வந்தால் அதிலிருந்து 9ம் வீடான துலாம் பாதக ஸ்தானமாக செயல் படும்.
இதில் ஒன்று யோசிக்க வேண்டும். அதாவது 9ம் வீடு என்பது பாக்கிய ஸ்தானமாக ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப் படுகிறது. அதே ஜோதிட சாஸ்திரத்தில் ஸ்திர லக்னங்களுக்கு இந்த பாக்கிய ஸ்தானமே பாதக ஸ்தானமாக செயல்படும் என்றும் சொல்லப் படுகிறது. அப்படி என்றால் என்ன அர்த்தம்? ஸ்திர லக்னங்களுக்கு பாக்கிய ஸ்தானமான 9ம் வீடு பாதக ஸ்தானமாக செயல்படுமே தவிர அதன் அதிபதி கிரகங்கள் பாதக கிரகங்களாகச் செயல்படாது என்று அர்த்தம். இந்த ஸ்திர லக்னங்களையும், அதன் பாதக ஸ்தானங்களையும் அதன் அதிபதி கிரகங்களையும் கீழே கொடுத்திருக்கிறேன்.
ஸ்திர லக்னங்கள் அதன் பாதக ஸ்தானங்கள் அதன் அதிபதி கிரகம்
------------------------- ------------------------------------- -----------------------------
1. ரிஷபம் மகரம் சனி
2. சிம்மம் மேஷம் செவ்வாய்
3. விருச்சிகம் கடகம் சந்திரன்
4. கும்பம் துலாம் சுக்கிரன்
அடுத்து உபய லக்னங்களைப் பற்றிப் பார்ப்போம். மிதுனம் உபய லக்னமாக வந்தால் அதிலிருந்து எண்ணி வரும் 7வது வீடாகிய தனுசு ராசியாகிய களஸ்திர ஸ்தானமே பாதக வீடாக அமையும். கன்னி உபய லக்னமாக வந்தால் அதிலிருந்து எண்ணி வரும் 7வது வீடாகிய மீன ராசியாகிய களஸ்திர ஸ்தானமே பாதக வீடாக அமையும். தனுசு உபய லக்னமாக வந்தால் அதிலிருந்து எண்ணி வரும் 7வது வீடாகிய களஸ்திர ஸ்தானமாகிய மிதுனம் பாதக வீடாக அமையும். மீனம் உபய லக்னமாக வந்தால் அதன் 7வது வீடாகிய களஸ்திர ஸ்தானமாகிய கன்னி பாதக வீடாக அமையும். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் உபய லக்னங்கள் நான்கும் மட்டும் ஒன்றுக்கொன்று பாதக வீடுகளாகின்றன என்று அறிந்து கொள்ள முடிகிறதல்லவா? இந்த உபய லக்னங்களையும், அதன் பாதக ஸ்தானங் களையும், அதன் அதிபதி கிரகங்களையும் கீழே கொடுத்திருக்கிறேன்.
உபய லக்னங்கள்: அதன் பாதக ஸ்தானங்கள்: அதன் அதிபதி கிரகம்:
------------------------- -------------------------------------- -----------------------------
1. மிதுனம் தனுசு குரு
2. கன்னி மீனம் குரு
3. தனுசு மிதுனம் புதன்
4. மீனம் கன்னி புதன்
ஒரு ஜாதகத்தை ஆராயும் போது இந்த பாதக ஸ்தானங்களும், அதன் அதிபதி கிரகங்களும், மிக மிக முக்கியம். அதோடு எந்தெந்த கிரகங்களுக்கு என்னென்ன நட்சத்திரங்கள் உரியவை என்பதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அந்த பட்டியலையும் கீழே கொடுத்திருக்கிறேன்.
------------------------------------
கேதுவிற்குரிய நட்சத்திரங்கள் : அஸ்வினி, மகம், மூலம்.
சுக்கிரனுக்குரிய நட்சத்திரங்கள் : பரணி, பூரம், பூராடம்.
சூரியனுக்குரிய நட்சத்திரங்கள் : கார்த்திகை, உத்திரம், உத்திராடம்.
சந்திரனுக்குரிய நட்சத்திரங்கள் : ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்.
செவ்வாய்க்குரிய நட்சத்திரங்கள் : மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்.
ராகுவிற்குரிய நட்சத்திரங்கள் : திருவாதிரை, ஸ்வாதி, சதயம்.
குருவிற்குரிய நட்சத்திரங்கள் : புனர்பூசம், விசாகம், பூரட்டாதி.
சனிக்குரிய நட்சத்திரங்கள் : பூசம், அனுஷம், உத்திரட்டாதி.
புதனுக்குரிய நட்சத்திரங்கள் : ஆயில்யம், கேட்டை, ரேவதி.
------------------------------------
ஏற்கனவே 12 ராசிகளையும், 27 நட்சத்திரங்களையும், 12 ராசிக்கு அதிபதி கிரகங்களையும், ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய நட்சத்திரங் களையும், சர, ஸ்திர, உபய லக்னைங்களையும், இந்த லக்னங்களுக்கு பாதக அதாவது கெடு பலன்களைச் செய்யும் ஸ்தானங்களையும் (வீடுகளையும்) பற்றிக் கூறியாகிவிட்டது.
பாதக ஸ்தானாங்கள்தான் கெடு பலனைச் செய்யுமே தவிர அதன் அதிபதி கிரகங்கள் கெடு பலனைச் செய்வதில்லை. 11ம் வீடு பாதக ஸ்தானமாக வந்தால் அதன் அதிபதி கிரகம் பாதகங்களைச் செய்ய வாய்ப்புகள் உண்டு. பாதக ஸ்தான அதிபதியாக வரும் ஒரு கிரகம் பாதக விளைவுகளைச் செய்யுமா? செய்யாதா? என்பதை நன்கு ஆராய்ந்து பலன் அறிய வேண்டும். இனி வரும் பாடங்களில் இதன் விளக்கத்தை இன்னும் தெரிந்து கொள்ளலாம்.
---------------------------------------

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012
ஜோதிடப் பாடங்கள் 5.asdf
ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் அந்த ஜாதகத்தில் லக்னத்தை முதல் வீடு என்கிறோம். அதிலிருந்து எண்ணி வரும் 5ம் வீட்டை புத்தி ஸ்தானம் என்றும், புத்திர ஸ்தானம் என்றும், பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் கூறுகிறோம். 9ம் வீட்டைப் பாக்கிய ஸ்தானம் என்றும் கூறுகிறோம். 1, 5, 9ம் வீடுகள் திரிகோண ஸ்தானங்கள் எனப்படும். 1, 4, 7, 10ம் வீடுகள் கேந்திர ஸ்தானங்கள் எனப்படும். 2ம் வீடு தன, வாக்கு, குடும்ப ஸ்தானம் எனப்படும். 11ம் வீடு லாப ஸ்தானம் எனப்படும். இதை சென்ற பாடத்திலேயே கூறியிருக் கிறேன். இப்போது மீண்டும் இதையே நியாபகப் படுத்துகிறேன். இப்போது நான் மேலே சொன்ன வீடுகள் யாவும் சுப வீடுகள். அதோடு போன பாடத்தில் சொன்ன சர, ஸ்திர, உபய ராசிகளையும் மீண்டும் நியாபகப் படுத்து கிறேன். மேஷம், கடகம், துலாம், மகரம் இவை நான்கும் சர ராசிகள். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இவை நான்கும் ஸ்திர ராசிகள். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவை நான்கும் உபய ராசிகள்.
மேலே சொன்ன 1, 5, 9, 4, 7, 10, 11, 2 ஆகிய வீடுகள் யாவும் சுப வீடுகள். ஆனால் இந்த சுப வீடுகளில் சில வீடுகள் பாதக வீடுகளாகவும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. சர ராசி ஒருவருக்கு லக்னமாக வந்தால் 11வது வீடாகிய லாப வீடே பாதக வீடாக செயல்படும். அதாவது மேஷ ராசி லக்னமாக வ்ந்தால் அதாவது மேஷம் லகனமாக வந்தால் 11ம் வீடாகிய கும்ப ராசியாகிய லாப ஸ்தானமே பாத்க ஸ்தானமாக செயல்படும். அதே போல் இன்னோரு சர ராசியாகிய கடக ராசியே லக்னமாக வந்தால் அதாவது கடகம் லக்னமானால் இதன் 11ம் வீடாகிய ரிஷப ராசி பாதக ஸ்தானமாக செயல்படும். துலா லக்னமாக வந்தால் சிம்ம ராசியாகிய 11ம் வீடு பாதக ஸ்தானமாக செயல்படும். மகர லக்னமாக வந்தால் இதன் 11ம் வீடாகிய விருச்சிக ராசியே பாதக ஸ்தானமாக செயல்படும். இதே போல் ஸ்திர ராசியான ரிஷபம் லக்னமாக வந்தால் 9ம் வீடாகிய பாக்கிய ஸ்தானமான மகர ராசியே பாதக ஸ்தானமாக செயல்படும். இன்னோரு ஸ்திர ராசியான சிம்மம் லக்னமாக வந்தால் 9ம் வீடான மேஷ ராசி பாதக ஸ்தானமாக் செயல்படும். விருச்சிகம் லக்னமாக வந்தால் கடக ராசி பாதக ஸ்தானமாக செயல்படும். கும்பம் லக்னமாக வந்தால் துலா ராசி பாதக ஸ்தானமாக செயல்படும். இதே போல் உபய ராசியான மிதுனம் லக்னமாக வந்தால் அதன் 7ம் வீடான களஸ்திர ஸ்தானமான தனுசு ராசியே பாதக ஸ்தானமாக செயல்படும். கன்னி லக்னமாக வந்தால் அதன் 7ம் வீடான மீன ராசியே பாதக ஸ்தானமாக செயல்படும். தனுசு லக்னமாக வந்தால் அதன் 7ம் வீடான மிதுன ராசி பாதக ஸ்தானமாக செயல்படும். மீனம் லக்னமாக வந்தால் அதன் 7ம் வீடான கன்னி பாதக ஸ்தானமாக செயல்படும். எனவே ஒரு ஜாதகத்தை ஆராயும் போது அந்த ஜாதகத்தில் முதலில் எது பாதக ஸ்தானம் என்பதை ஆராய்ந்து பதில் கூறினால் பலன்கள் மிகச் சரியாக இருக்கும். அது மாத்திரம் அல்லாமல் அனைத்து லக்னங்களுக்குமே 2, 7ம் வீடுகள் மாரக ஸ்தானைங் களாகும். மாரகம் என்றால் மரணம் அல்லது மரணத்திற்கு ஒப்பான விஷயங்கள் என்று அர்த்தம். இதில் 2ம் அல்லது 7ம் வீட்டில் உள்ள கிரகங்களின் திசா காலம் நடக்கும் பொழுது அவை மாரக பலனைக் கொடுக்கும் என்று சொல்லி விட முடியாது. பால்யவயதாகவோ அல்லது மத்திம வயதாகவோ இருக்கும் நேரத்தில் இந்த திசா காலங்கள் வந்தால் 2ம் வீட்டிலிருக்கும் கிரகத்தின் திசா காலம் வந்தால் தன, குடும்ப, வாக்கிற்குரிய பலன்களை அந்த கிரகம் 2ம் வீட்டில் எந்த நிலையில் இடம் பெற்றிருக்கிறது என்பதைப் பொறுத்து நல்ல அல்லது கெட்ட பலன்களாகச் செய்யும். 7மிடத்தில் ஒரு கிரகம் இருந்து திசா நடத்தினால் திருமண வாழ்க்கை எப்படி என்பது பற்றிச் சொல்லும். மாரக பலன்கள் எப்போது நடைபெறும் என்றால் அந்த ஜாதகனது ஆயுள் ஸ்தானம், சனியின் நிலைமை இவர்களைப் பொறுத்துத்தான் 2, 7ம் வீடுகள் மாரக பலன்களை தனது புக்திக் கால்த்தில் வழங்குவார்கள். எனவே 2, 7ம் வீட்டில் உள்ள கிரகைங்களின் திசா காலங்கள் வந்து விட்டால் மாரகத்தைச் செய்யும் என்று தவறான முடிவுக்கு வரக் கூடாது.
ஆக 1, 4, 7, 10, 5, 9, 2, 11 ஆகிய வீடுகள் எப்பொழுது நல்லவர்கள், எப்போது கெட்டவர்கள் என்பதை மிக நன்றாக துல்லியமாக ஆராய்ந்த பின்னரே பலன்களைத் தெளிவாகச் சொல்ல முடியும் என்பது தெரிகிறது.

வியாழன், 16 பிப்ரவரி, 2012
ஜோதிடப் பாடங்கள் 4.
ஒரு ராசிச் சக்கரத்தில் 12 ராசிகள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த 12 ராசிகளை அந்தக் காலத்திலேயே ரிஷிகள் மூன்று பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். அதாவது மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிகளையும் சர ராசிகள் என்றும், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கு ராசிகளையும் ஸ்திர ராசிகள் என்றும், மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கு ராசிகளையும் உபய ராசிகள் என்றும் வகைப் படுத்தியிருக்கிறார்கள். அதன் விளக்கத்தைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
| மீனம் உபயம் | மேஷம் சரம் | ரிஷபம் ஸ்திரம் | மிதுனம் உபயம் |
| கும்பம் ஸ்திரம் | ராசிக்கட்டம் | கடகம் சரம் | |
| மகரம் சரம் | சிம்மம் ஸ்திரம் | ||
| தனுசு உபயம் | விருச்சிகம் ஸ்திரம் | துலாம் சரம் | கன்னி உபயம் |
ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012
ஜோதிடப் பாடங்கள் 3.
| மீனம் 12 | மேஷம் 1 (லக்னம்) | ரிஷபம் 2 | மிதுனம் 3 |
| கும்பம் 11 | ராசிக்கட்டம் | கடகம் 4 | |
| மகரம் 10 | சிம்மம் 5 | ||
| தனுசு 9 | விருச்சிகம் 8 | துலாம் 7 | கன்னி 6 |
லக்னத்திலிருந்து 3ம் வீட்டின் காரக பலன்களை இனி பார்க்கலாம். வீரம், இளைய சகோதரம், வலது காது, பராக்கிரமம், காதில் அணியக் கூடிய பொன் நகைகள், காது, நோய், இசை, துணைவர், ஆளடிமை, தைரியம், தீரச் செயல்கள், மனக் குழப்பம், சித்தப் பிரமை, தெளிவு, கனவுகள், உறவினர்கள், அலைதல், நற்பண்பு, பொழுது போக்கு, உடல் வலிமை, உடல் வளர்ச்சி இவை யாவும் 3ம் வீட்டின் காரக பலன்கள். இவை அனைத்திற்கும் காரகர் செவ்வாய் பகவான்.
சனி, 11 பிப்ரவரி, 2012
ஜோதிடப் பாடங்கள் 2
ஒரு மனிதன் பணக்காரனாகவோ, அல்லது ஏழையாகவோ பிறப்பதும், அல்லது ஒரு ஏழை பணக்காரன் ஆவதும், பணக்காரன் ஏழை ஆவதும் அவரவர் ஜாதக ரீதியாகவே நடைபெறுகின்றன. ஒரு ஜாதகத்தில் 12 ராசிகள் இடம் பெறுகின்றன. இந்தப் ப்ன்னிரெண்டு ராசிகளுக்கும் 9 கிரகங்கள் அதிபதியகிறார்கள். கீழே அதன் விளக்கப் படத்தைக் கொடுத்திருக்கிறேன்.
இதே போல் இந்த ஒன்பது கிரகங்களுக்கும் உரிய வீடுகளைப் பற்றியும் (Houses of Planets) மற்ற வீடுகளில் இருக்கும் போது அவைகளுக்கு உள்ள சக்தியைப் (Power) பற்றியும் உங்களுக்கு அட்டவணையாக்கித் தந்துள்ளேன். அதாவது சக்தி என்பதன் அர்த்தம் என்ன்வென்றால் எந்தெந்த வீட்டில் எந்தெந்த கிரகங்கள் ஆட்சி, உச்சம் போன்ற பலன்களைச் செய்கின்றன? என்ற விளக்கத்தைக் கொடுத்திருக்கிறேன். அதோடு எந்த வீட்டில் பகை, நட்பு என்ற விளக்கத்தையும் கொடுத்திருக்கிறேன். 
பொதுவாக ஒரு ராசிச் சக்கரத்தில் 12 ராசிகள் உண்டு. இந்த பன்னிரெண்டு ராசிகளில் ஒரு வீடு 'லக்னம்' என்பதே ஆகும். இந்த 'லக்னம்' என்பதை ஜோதிடர்கள் ஜாதகங்களில் 'லக்னம்' என்றோ, அல்லது 'ல' என்றோ, அல்லது 'லக்' என்றோ குறிப்பிட்டிருப்பார்கள். இந்த வீட்டையே முதல் வீடாகக் கொண்டு ஜோதிடர்கள் அவரவர்க்குரிய பலன்களைச் சொல்வார்கள். லக்னம் என்றால் என்ன? ஒரு குழந்தை தாயின் வயிற்றிலிருந்து பூமியில் வந்து பிறக்கும் நேரத்தின் அந்த மையப் புள்ளிதான் 'லக்னம்' என்பதாகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது முதலான 9 கிரகங்களும் அந்த 'லக்னம்' என்ற மையப் புள்ளியி லிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கின்றனவோ அதன் படி அந்த ராசிச் சக்கரத்தில் இடம் பெறுவார்கள். 'லக்னம்' இடம்பெறும் வீட்டை 1ம் வீடு என்றும், அதற்கடுத்த வீடுகளை வரிசைக் கிரமமாக எண்ணிப் பார்க்க 12 வீடுகளையும் தெரிந்து கொள்ளலாம். அவற்றில் அதாவது லக்னம் முதல் 12 வீடுகளில் எந்தெந்த கிரகங்கள் எங்கெங்கு இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதற்கேற்ற பலன்களை அந்தந்த கிரகங்களின் திசா காலங்களில் செய்வார்கள். இதனை உதாரண ஜாதகங்களோடு இனி வரும் பாடங்களில் பார்க்கலாம்.
இதே போல் இந்த ஒன்பது கிரகங்களுக்கும் உரிய வீடுகளைப் பற்றியும் (Houses of Planets) மற்ற வீடுகளில் இருக்கும் போது அவைகளுக்கு உள்ள சக்தியைப் (Power) பற்றியும் உங்களுக்கு அட்டவணையாக்கித் தந்துள்ளேன். அதாவது சக்தி என்பதன் அர்த்தம் என்ன்வென்றால் எந்தெந்த வீட்டில் எந்தெந்த கிரகங்கள் ஆட்சி, உச்சம் போன்ற பலன்களைச் செய்கின்றன? என்ற விளக்கத்தைக் கொடுத்திருக்கிறேன். அதோடு எந்த வீட்டில் பகை, நட்பு என்ற விளக்கத்தையும் கொடுத்திருக்கிறேன். 
பொதுவாக ஒரு ராசிச் சக்கரத்தில் 12 ராசிகள் உண்டு. இந்த பன்னிரெண்டு ராசிகளில் ஒரு வீடு 'லக்னம்' என்பதே ஆகும். இந்த 'லக்னம்' என்பதை ஜோதிடர்கள் ஜாதகங்களில் 'லக்னம்' என்றோ, அல்லது 'ல' என்றோ, அல்லது 'லக்' என்றோ குறிப்பிட்டிருப்பார்கள். இந்த வீட்டையே முதல் வீடாகக் கொண்டு ஜோதிடர்கள் அவரவர்க்குரிய பலன்களைச் சொல்வார்கள். லக்னம் என்றால் என்ன? ஒரு குழந்தை தாயின் வயிற்றிலிருந்து பூமியில் வந்து பிறக்கும் நேரத்தின் அந்த மையப் புள்ளிதான் 'லக்னம்' என்பதாகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது முதலான 9 கிரகங்களும் அந்த 'லக்னம்' என்ற மையப் புள்ளியி லிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கின்றனவோ அதன் படி அந்த ராசிச் சக்கரத்தில் இடம் பெறுவார்கள். 'லக்னம்' இடம்பெறும் வீட்டை 1ம் வீடு என்றும், அதற்கடுத்த வீடுகளை வரிசைக் கிரமமாக எண்ணிப் பார்க்க 12 வீடுகளையும் தெரிந்து கொள்ளலாம். அவற்றில் அதாவது லக்னம் முதல் 12 வீடுகளில் எந்தெந்த கிரகங்கள் எங்கெங்கு இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதற்கேற்ற பலன்களை அந்தந்த கிரகங்களின் திசா காலங்களில் செய்வார்கள். இதனை உதாரண ஜாதகங்களோடு இனி வரும் பாடங்களில் பார்க்கலாம். வியாழன், 9 பிப்ரவரி, 2012
ஜோதிடப் பாடங்கள் பகுதி 1.
ஜோதிட சாஸ்திரம் என்பது மிகமிக நுட்பம் வாய்ந்தது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்னென்ன விஷயங்களை அவன் கடந்து வந்திருப்பான், என்னென்ன விஷயைங்களை அவன் அனுபவிக்கப் போகிறான் என்று மிக அற்புதமாக இந்த சாஸ்திரமானது அவரவர் ஜாதக ரீதியாக உண்மையை எடுத்துரைக்கும். இங்கே ஜோதிட விஷயங்களைப் பற்றிய மிக முக்கியமான அடிப்படை விஷயங்களைப் பற்றிக் கூறுகிறேன். ஜோதிட சாஸ்திர ரீதியாக 12 (பன்னிரெண்டு ராசிகள் உண்டு. அவையாவன:
1. மேஷம்,
2. ரிஷபம்,
3. மிதுனம்,
4. கடகம்,
5. சிம்மம்,
6. கன்னி,
7. துலாம்,
8.விருச்சிகம்,
9. தனுசு,
10. மகரம்,
11. கும்பம்,
12. மீனம்.
ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்கள் உண்டு. அவையாவன: சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியோர். 12 (பன்னிரெண்டு) ராசிகளுக்கும் இந்த ஒன்பது கிரகங்களே அதிபதிகளாக வருகிறார்கள்.
மேஷம் - செவ்வாய்
ரிஷபம் - சுக்கிரன்
மிதுனம் - புதன்
கடகம் - சந்திரன்
சிம்மம் - சூரியன்
கன்னி - புதன்
துலாம் - சுக்கிரன்
விருச்சிகம் - செவ்வாய்
தனுசு - குரு
மகரம் - சனி
கும்பம் - சனி
மீனம் - குருஜோதிட சாஸ்திர்த்தில் இந்த ஒன்பது கிரகங்கள் போக 12 ராசியிலும் 27 (இருபத்தியேழு) நட்ச்த்திரங்கள் இடம் பெறுகின்றன. அவையாவன:
இந்த இருபத்தியேழு நட்சத்திரங்களையும் நன்கு மனதில் இருத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதே போல் திதிகள் 15 (பதினைந்து) இருக்கின்றன. அதாவது இவை ஜாதகத்தில் அதாவது 12 ராசிகளில் இடம் பெறவில்லை. ஜோதிட சாஸ்திரத்திற்கு முக்கியமாகப் பஞ்சாங்கம் தேவை. இந்த பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களைக் கொண்டது. அவையாவன: வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்பவையாகும். இதில் மேலே குறிப்பிட்டிருப்பது 27 நட்சத்திரங்கள் ஆகும். இங்கே கீழே குறிப்பிட்டிருப்பது 30 (முப்பது) திதிகள் ஆகும்.

ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்கள்தான் வாரம் ஆகும். திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெள்ர்ணமி வரை உள்ள பதினைந்து நாட்களும், தேய்பிறைப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து நாட்களும், அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும். திதியில் பாதி கரணம். அதாவது திதி என்பது ஆகாயத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம். யோகம் என்பது ஆகாயத்தில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்லும் மொத்த தூரம். ஒரு ஜாதகம் கணிதம் செய்வதற்கு மேலே கூறிய அனைத்து விவரங்களும் தேவை. முக்கியமாக ஒரு குழந்தை பிறந்த ஊர், பிறந்த வருடம், தேதி, மாதம், பிறந்த நேரம் இவை இருந்தால்தான் அந்தக் குழந்தையின் ஜாதகத்தை கணிதம் செய்ய முடியும். ஒரு மனிதன் பிறக்கும் போது அதாவது அந்த மனிதனது ஜனன நேரத்தில் மேலே கூறிய 12 ராசிகளும், அவற்றில் இடம் பெற்றிருக்கும் 9 கிரகங்களும், இந்த கிரகங்கள் நிற்கும் 27 நட்சத்த்ரங்களுமே அந்த மனிதனின் வாழ்க்கையை நடத்திச் செல்கின்றன. ஒருவன் நல்ல பெற்றோருக்குப் பிறப்பானா? அவர்கள் மூலமே வளர்க்கப் படுவானா? அல்லது யார் மூலமாவது தத்துப் பிள்ளையாக வளர்க்கப் படுவானா? அவனது படிப்பு நிலைகள் திருப்திகரமாக இருக்கிறதா? அல்லது அவன் படிப்பில் தடைகள் உண்டா? வாழ்க்கையில் முன்னேறுவானா? அல்லது கீழ் நிலையிலேயே உழல்வானா? நல்லதொரு திருமண வாழ்க்கை அமையுமா? அல்லது திருமணத்தில் தோல்வியா? ஒரு மனைவியுடன் வாழ்வானா? அல்லது பல தாரங்கள் உண்டா? அரசு அல்லது தனியார் கம்பெனிகளில் வேலை பார்ப்பானா? அல்லது சொந்தத் தொழில் செய்வானா? தொழிலில் மேன்மை உண்டா? அல்லது தோல்வி ஏற்படுமா? அல்லது எந்தத் தொழிலும் இல்லாமல் வீணே கால்ம் கழிப்பவனா? தன் பிள்ளைகளுக்கு நல்லதொரு தந்தையாக வாழ்வானா? அல்லது பிள்ளைகளால் வெறுக்கப் படக் கூடிய வாழ்வு வாழ்வானா? பிள்ளைகளின் ஆதரவு உண்டா? இல்லையா? என்பன யாவுமே அவனது ஜாதகத்தில் இடம் பெற்றிருக்கும் கிரகங்கள் தனது திசா காலங்களில் அவனை எப்படி வழி நடத்திச் செல்கிறதோ அப்படித்தான் நடக்கும். இது முற்றிலும் உண்மையான விஷயமே. இனி அடுத்த இடுகையில் பாடம் 2ஐப் பார்க்கலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)