ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

ஜோதிடப் பாடம் 6

முதல் 5 பாடங்களிலும் 12 ராசிகளையும், 27 நட்சத்திரங்களையும், மற்றும் சர, ஸ்திர, உபய ராசிகள் எவை எவை என்றும் பார்த்தோம். மீண்டும் நியாபகப் படுத்துகிறேன்.

சர ராசிகள்               -   மேஷம், கடகம், துலாம், மகரம்.
ஸ்திர ராசிகள்        -    ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்.
உபய ராசிகள்          -    மிதுனம், கன்னி, தனுசு, மீனம்.
          
           சர ராசியான மேஷம் லக்னமாக வந்தால் அதிலிருந்து  11ம் வீடாகிய லாப ஸ்தானமாகிய கும்ப ராசி பாதக ஸ்தானமாக செயல்படும். இன்னோரு சர ராசியான கடகம் லக்னமாக வந்தால் அதிலிருந்து 11ம் வீடான லாப ஸ்தானமாகிய ரிஷபம் பாதக ஸ்தானமாக செயல்படும். இன்னொரு சர ராசியான துலாம் லக்னமாக வந்தால்  அதிலிருந்து 11ம் வீடான லாப ஸ்தானமாகிய சிம்மம்  பாதக ஸ்தானமாக செயல்படும். இன்னொரு சர ராசியான மகரம் லக்னமாக வந்தால் அதிலிருந்து 11ம் வீடான லாப ஸ்தானமாகிய விருச்சிகம்  பாதக ஸ்தானமாக செயல்படும். இந்த சர லக்னங்களையும் அதன் பாதக ஸ்தானங்களையும் அதன் அதிபதி கிரகைங்களையும் கீழே கொடுத்திருக்கிறேன். அதிபதி கிரகங்கள் என்றால் அந்தந்த வீடுகளின் தலைமைக் கிரகங்கள் என்று அர்த்தம். அந்த கிரகங்கள் அந்த வீடுகளை ஆட்சி செய்கின்றன என்று அர்த்தம்.

சர லக்னங்கள்             அதன் பாதக ஸ்தானங்கள்          அதன் அதிபதி கிரகம்
---------------------            -------------------------------------           -----------------------------
1. மேஷம்                                      கும்பம்                                                 சனி
2. கடகம்                                         ரிஷபம்                                                சுக்கிரன்
3. துலாம்                                        சிம்மம்                                                 சூரியன்
4. மகரம்                                          விருச்சிகம்                                        செவ்வாய்
            
           அடுத்து ஸ்திர ராசியான ரிஷபம் லக்னமாக வந்தால் அதிலிருந்து 9ம் வீடான மகரம் பாதக ஸ்தானமாக செயல்படும். இன்னொரு ஸ்திர ராசியான சிம்மம் லக்னமாக வந்தால் அதிலிருந்து 9ம் வீடான மேஷம் பாதக ஸ்தானமாக செயல்படும். இன்னொரு ஸ்திர ராசியான விருச்சிகம் லக்னமாக வந்தால் அதிலிருந்து 9ம் வீடான கடகம் பாதக ஸ்தானமாக செயல்படும். இன்னொரு ஸ்திர ராசியான கும்பம் லக்னமாக வந்தால் அதிலிருந்து 9ம் வீடான துலாம் பாதக ஸ்தானமாக செயல் படும்.
            
               இதில் ஒன்று யோசிக்க வேண்டும். அதாவது 9ம் வீடு என்பது பாக்கிய ஸ்தானமாக ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப் படுகிறது. அதே ஜோதிட சாஸ்திரத்தில் ஸ்திர லக்னங்களுக்கு இந்த பாக்கிய ஸ்தானமே பாதக ஸ்தானமாக செயல்படும் என்றும் சொல்லப் படுகிறது. அப்படி என்றால் என்ன அர்த்தம்? ஸ்திர லக்னங்களுக்கு பாக்கிய ஸ்தானமான 9ம் வீடு பாதக ஸ்தானமாக செயல்படுமே தவிர அதன் அதிபதி கிரகங்கள் பாதக கிரகங்களாகச் செயல்படாது என்று அர்த்தம். இந்த ஸ்திர லக்னங்களையும், அதன் பாதக ஸ்தானங்களையும் அதன் அதிபதி கிரகங்களையும் கீழே கொடுத்திருக்கிறேன்.

ஸ்திர லக்னங்கள்          அதன் பாதக ஸ்தானங்கள்      அதன் அதிபதி கிரகம்
-------------------------          -------------------------------------       -----------------------------
1.   ரிஷபம்                                   மகரம்                                                சனி
2.   சிம்மம்                                    மேஷம்                                            செவ்வாய்
3.   விருச்சிகம்                           கடகம்                                               சந்திரன்
4.   கும்பம்                                     துலாம்                                             சுக்கிரன்
              
            அடுத்து உபய லக்னங்களைப் பற்றிப் பார்ப்போம். மிதுனம் உபய லக்னமாக வந்தால் அதிலிருந்து எண்ணி வரும் 7வது வீடாகிய தனுசு ராசியாகிய களஸ்திர ஸ்தானமே பாதக வீடாக அமையும். கன்னி உபய லக்னமாக வந்தால் அதிலிருந்து எண்ணி வரும் 7வது வீடாகிய மீன ராசியாகிய களஸ்திர ஸ்தானமே பாதக வீடாக அமையும். தனுசு உபய லக்னமாக வந்தால் அதிலிருந்து எண்ணி வரும் 7வது வீடாகிய களஸ்திர ஸ்தானமாகிய மிதுனம் பாதக வீடாக அமையும். மீனம் உபய லக்னமாக வந்தால் அதன் 7வது வீடாகிய களஸ்திர ஸ்தானமாகிய கன்னி பாதக வீடாக அமையும். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் உபய லக்னங்கள் நான்கும் மட்டும்  ஒன்றுக்கொன்று பாதக வீடுகளாகின்றன என்று அறிந்து கொள்ள முடிகிறதல்லவா?  இந்த உபய லக்னங்களையும், அதன் பாதக ஸ்தானங் களையும்,  அதன் அதிபதி கிரகங்களையும்  கீழே கொடுத்திருக்கிறேன்.

உபய லக்னங்கள்:            அதன் பாதக ஸ்தானங்கள்:          அதன் அதிபதி கிரகம்:
-------------------------            --------------------------------------         -----------------------------
1. மிதுனம்                                            தனுசு                                                 குரு
2. கன்னி                                                மீனம்                                                  குரு
3. தனுசு                                                  மிதுனம்                                            புதன்
4. மீனம்                                                   கன்னி                                               புதன்           
     
             ஒரு ஜாதகத்தை ஆராயும் போது இந்த பாதக ஸ்தானங்களும், அதன் அதிபதி கிரகங்களும், மிக மிக முக்கியம். அதோடு எந்தெந்த கிரகங்களுக்கு   என்னென்ன நட்சத்திரங்கள் உரியவை என்பதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அந்த பட்டியலையும் கீழே கொடுத்திருக்கிறேன்.
                                           ------------------------------------
கேதுவிற்குரிய நட்சத்திரங்கள்         :      அஸ்வினி, மகம், மூலம்.
சுக்கிரனுக்குரிய நட்சத்திரங்கள்     :      பரணி, பூரம், பூராடம்.
சூரியனுக்குரிய நட்சத்திரங்கள்      :    கார்த்திகை, உத்திரம், உத்திராடம்.

சந்திரனுக்குரிய நட்சத்திரங்கள்     :    ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்.
செவ்வாய்க்குரிய நட்சத்திரங்கள்  :     மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்.
ராகுவிற்குரிய நட்சத்திரங்கள்          :      திருவாதிரை, ஸ்வாதி, சதயம்.
குருவிற்குரிய நட்சத்திரங்கள்         :      புனர்பூசம்,  விசாகம், பூரட்டாதி.
சனிக்குரிய நட்சத்திரங்கள்                :      பூசம், அனுஷம், உத்திரட்டாதி.
புதனுக்குரிய நட்சத்திரங்கள்            :     ஆயில்யம், கேட்டை, ரேவதி.
                                             ------------------------------------
                    ஏற்கனவே 12 ராசிகளையும், 27 நட்சத்திரங்களையும், 12 ராசிக்கு அதிபதி கிரகங்களையும், ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய நட்சத்திரங் களையும், சர, ஸ்திர, உபய லக்னைங்களையும், இந்த லக்னங்களுக்கு  பாதக அதாவது கெடு பலன்களைச் செய்யும்  ஸ்தானங்களையும் (வீடுகளையும்) பற்றிக் கூறியாகிவிட்டது.
                     பாதக ஸ்தானாங்கள்தான் கெடு பலனைச் செய்யுமே தவிர அதன் அதிபதி கிரகங்கள்  கெடு பலனைச் செய்வதில்லை. 11ம் வீடு பாதக ஸ்தானமாக வந்தால் அதன் அதிபதி கிரகம் பாதகங்களைச் செய்ய வாய்ப்புகள் உண்டு.  பாதக ஸ்தான அதிபதியாக வரும் ஒரு கிரகம் பாதக விளைவுகளைச் செய்யுமா? செய்யாதா?  என்பதை நன்கு ஆராய்ந்து பலன் அறிய வேண்டும். இனி வரும் பாடங்களில் இதன் விளக்கத்தை இன்னும் தெரிந்து கொள்ளலாம்.
                                         ---------------------------------------

1 கருத்து: