வியாழன், 16 பிப்ரவரி, 2012

ஜோதிடப் பாடங்கள் 4.

ஒரு ராசிச் சக்கரத்தில் 12 ராசிகள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த 12 ராசிகளை அந்தக் காலத்திலேயே ரிஷிகள் மூன்று பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். அதாவது மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிகளையும் சர ராசிகள் என்றும், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கு ராசிகளையும் ஸ்திர ராசிகள் என்றும், மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கு ராசிகளையும் உபய ராசிகள் என்றும் வகைப் படுத்தியிருக்கிறார்கள். அதன் விளக்கத்தைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
  மீனம்
 உபயம்
 மேஷம்
    சரம்                    
ரிஷபம்
  ஸ்திரம்
 மிதுனம்
  உபயம்
  கும்பம்
  ஸ்திரம்

         ராசிக்கட்டம்
 கடகம்
  சரம்
  மகரம்
   சரம்
 சிம்மம்
   ஸ்திரம்
 தனுசு
  உபயம்
 விருச்சிகம்
   ஸ்திரம்
 துலாம்
   சரம்
கன்னி
   உபயம்
அதாவது ஜோதிட சாஸ்திர ரீதியாக இந்த சர, ஸ்திர, உபய ராசிகளை அடிப்படையாகக் கொண்டுதான் ஜாதகத்திற்குரிய பலன்களை ஆராய வேண்டும். ஏற்கனவே எந்த ராசி லக்னமாக வருகிறதோ அந்த வீட்டையே முதல் வீடாகக் கொண்டு பலன்களை ஆராய வேண்டும் என்று  முன்பே கூறி இருக்கிறேன். அதோடு லக்னத்திலிருந்து எண்ணி வரும் 1 முதல், 12 வீடுகளும் என்னென்ன பலன்களைப் பற்றிச் சொல்கின்றன என்றும் ஏற்கனவே கூறியிருக்கிறேன். அதன் படிப் பார்க்கும் பொழுது 7ம் வீடு களஸ்திர ஸ்தானம். அதாவது கணவன் அல்லது மனைவி பற்றிச் சொல்லும் வீடு என்றும், 11ம் வீடு லாப ஸ்தானம் என்றும், 9ம் வீடு பாக்கிய ஸ்தானம் என்றும் கூறியிருக்கிறேன். ஆனால் இப்படி சுப பலன்களைச் சொல்லும் இந்த வீடுகளே இப்படி சர, ஸ்திர, உபய லக்னங்களுக்கு பாதக வீடுகளாக வருகின்றன. சுருக்கமாக நினைவு படுத்துகிறேன். அதாவது லக்னமாகிய முதல் வீட்டை உயிர் ஸ்தானம் என்றும், 2ம் வீட்டை தன, வாக்கு, குடும்ப ஸ்தானம் என்றும், 3ம் வீட்டை தைர்ய, வீர்ய ஸ்தானம் என்றும், வெற்றி தோல்விகளுக்குரிய இடம் என்றும், 4ம் வீட்டை சுகஸ்தானம், தாய், சொத்துக்கள் பற்றிச் சொல்லும் இடம் என்றும், 5ம் வீட்டை புத்திர ஸ்தானம், புத்தி ஸ்தானம் என்றும், 6ம் வீட்டை ருண, ரோக ஸ்தானம் (கடன், நோய்) என்றும், 7ம் வீட்டை களஸ்திர ஸ்தானம் (வாழ்க்கைத் துணையாகிய கணவன், மனைவி இவர்களுக்குரிய இடம்) என்றும், 8ம் வீட்டை ஆயுள் ஸ்தானம் என்றும், 9ம் வீட்டை பாக்கிய ஸ்தானம், தர்ம ஸ்தானம், தந்தைக்குரிய வீடு என்றும், 10ம் வீட்டை கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம் என்றும், 11ம் வீட்டை லாப ஸ்தானம், மூத்த சகோதர, சகோதரிக்கு உரிய இடம் என்றும், 12வது வீட்டை அயன, சயன, போக ஸ்தானம் (நல்ல சாப்பாடு, நிம்மதியான உறக்கம், படுக்கைக்குரிய இடம்) என்றும் ஜோதிஷ சாஸ்திரம் சொல்கிறது. இன்னும் சில முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. லக்னம் முதல் 12 வீடுகளில் 1, 5, 9ம் வீடுகளை திரிகோண ஸ்தானங்கள் என்றும், 1, 4, 7, 10 ஆகிய வீடுகளை கேந்திர ஸ்தானங்கள் என்றும் ஜோதிஷ சாஸ்திரம் சொல்கிறது. இதில் திரிகோணம், கேந்திரம் என்னும் இரண்டு ஸ்தானங்களிலும் இடம் பெறும் வீடு 1ம் வீடு என்னும் முதல் வீடு.  5, 9 ஆகிய வீடுகளை நாராயணனா கவும், மகாலக்ஷ்மியாகவும், 1, 4, 7, 10 ஆகிய வீடுகளை நான்கு தூண்களாகவும் ஜோதிஷ சாஸ்திரம் சொல்கிறது. எனவே இந்த வீடுகளில் எந்த வீடும் பழுதடையாமல் இருப்பது நன்மை தரும். இனி இந்த வீடுகளைப் பற்றியும், அவை செய்யும் பலன்களைப் பற்றியும் அடுத்த பாடத்தில் பார்க்கலாம். 

1 கருத்து: