ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

ஜோதிடப் பாடங்கள் 5.asdf

ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் அந்த ஜாதகத்தில் லக்னத்தை முதல் வீடு என்கிறோம். அதிலிருந்து எண்ணி வரும் 5ம் வீட்டை புத்தி ஸ்தானம் என்றும், புத்திர ஸ்தானம் என்றும், பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் கூறுகிறோம். 9ம் வீட்டைப் பாக்கிய ஸ்தானம் என்றும் கூறுகிறோம். 1, 5, 9ம் வீடுகள் திரிகோண ஸ்தானங்கள் எனப்படும். 1, 4, 7, 10ம் வீடுகள் கேந்திர ஸ்தானங்கள் எனப்படும். 2ம் வீடு தன, வாக்கு, குடும்ப ஸ்தானம் எனப்படும். 11ம் வீடு லாப ஸ்தானம் எனப்படும். இதை சென்ற பாடத்திலேயே கூறியிருக் கிறேன். இப்போது மீண்டும் இதையே நியாபகப் படுத்துகிறேன்.  இப்போது நான் மேலே சொன்ன வீடுகள் யாவும் சுப வீடுகள். அதோடு போன பாடத்தில் சொன்ன சர, ஸ்திர, உபய ராசிகளையும் மீண்டும் நியாபகப் படுத்து கிறேன். மேஷம், கடகம், துலாம், மகரம் இவை நான்கும் சர ராசிகள். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இவை நான்கும் ஸ்திர ராசிகள். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவை நான்கும் உபய ராசிகள்.
மேலே சொன்ன 1, 5, 9, 4, 7, 10, 11, 2 ஆகிய வீடுகள் யாவும் சுப வீடுகள். ஆனால் இந்த சுப வீடுகளில் சில வீடுகள் பாதக வீடுகளாகவும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. சர ராசி ஒருவருக்கு லக்னமாக வந்தால் 11வது வீடாகிய லாப வீடே பாதக வீடாக செயல்படும். அதாவது மேஷ ராசி லக்னமாக வ்ந்தால் அதாவது மேஷம் லகனமாக வந்தால் 11ம் வீடாகிய கும்ப ராசியாகிய லாப ஸ்தானமே பாத்க ஸ்தானமாக செயல்படும். அதே போல் இன்னோரு சர ராசியாகிய கடக ராசியே லக்னமாக வந்தால் அதாவது கடகம் லக்னமானால் இதன் 11ம் வீடாகிய ரிஷப ராசி பாதக ஸ்தானமாக செயல்படும். துலா லக்னமாக வந்தால் சிம்ம ராசியாகிய 11ம் வீடு பாதக ஸ்தானமாக செயல்படும். மகர லக்னமாக வந்தால் இதன் 11ம் வீடாகிய விருச்சிக ராசியே பாதக ஸ்தானமாக செயல்படும். இதே போல் ஸ்திர ராசியான ரிஷபம் லக்னமாக வந்தால் 9ம் வீடாகிய பாக்கிய ஸ்தானமான மகர ராசியே பாதக ஸ்தானமாக செயல்படும். இன்னோரு ஸ்திர ராசியான சிம்மம் லக்னமாக வந்தால் 9ம் வீடான மேஷ ராசி பாதக ஸ்தானமாக் செயல்படும். விருச்சிகம் லக்னமாக வந்தால் கடக ராசி பாதக ஸ்தானமாக செயல்படும். கும்பம் லக்னமாக வந்தால் துலா ராசி பாதக ஸ்தானமாக செயல்படும். இதே போல் உபய ராசியான மிதுனம் லக்னமாக வந்தால் அதன் 7ம் வீடான களஸ்திர ஸ்தானமான தனுசு ராசியே பாதக ஸ்தானமாக செயல்படும். கன்னி லக்னமாக வந்தால் அதன் 7ம் வீடான மீன ராசியே பாதக ஸ்தானமாக செயல்படும். தனுசு லக்னமாக வந்தால் அதன் 7ம் வீடான மிதுன ராசி பாதக ஸ்தானமாக செயல்படும். மீனம் லக்னமாக வந்தால் அதன் 7ம் வீடான கன்னி பாதக ஸ்தானமாக செயல்படும். எனவே ஒரு ஜாதகத்தை ஆராயும் போது அந்த ஜாதகத்தில் முதலில் எது பாதக ஸ்தானம் என்பதை ஆராய்ந்து பதில் கூறினால் பலன்கள் மிகச் சரியாக இருக்கும். அது மாத்திரம் அல்லாமல் அனைத்து லக்னங்களுக்குமே 2, 7ம் வீடுகள் மாரக ஸ்தானைங் களாகும். மாரகம் என்றால் மரணம் அல்லது மரணத்திற்கு ஒப்பான விஷயங்கள் என்று அர்த்தம். இதில் 2ம் அல்லது 7ம் வீட்டில் உள்ள கிரகங்களின் திசா காலம் நடக்கும் பொழுது அவை மாரக பலனைக் கொடுக்கும் என்று சொல்லி விட முடியாது. பால்யவயதாகவோ அல்லது மத்திம வயதாகவோ இருக்கும் நேரத்தில் இந்த திசா காலங்கள் வந்தால் 2ம் வீட்டிலிருக்கும் கிரகத்தின் திசா காலம் வந்தால் தன, குடும்ப, வாக்கிற்குரிய பலன்களை அந்த கிரகம் 2ம் வீட்டில் எந்த நிலையில் இடம் பெற்றிருக்கிறது என்பதைப் பொறுத்து நல்ல அல்லது கெட்ட பலன்களாகச் செய்யும். 7மிடத்தில் ஒரு கிரகம் இருந்து திசா நடத்தினால் திருமண வாழ்க்கை எப்படி என்பது பற்றிச் சொல்லும்.  மாரக பலன்கள் எப்போது நடைபெறும் என்றால் அந்த ஜாதகனது ஆயுள் ஸ்தானம், சனியின் நிலைமை இவர்களைப் பொறுத்துத்தான் 2, 7ம் வீடுகள் மாரக பலன்களை தனது புக்திக் கால்த்தில் வழங்குவார்கள். எனவே 2, 7ம் வீட்டில் உள்ள கிரகைங்களின் திசா காலங்கள் வந்து விட்டால் மாரகத்தைச் செய்யும் என்று தவறான முடிவுக்கு வரக் கூடாது.  
ஆக 1, 4, 7, 10, 5, 9, 2, 11 ஆகிய வீடுகள் எப்பொழுது நல்லவர்கள், எப்போது கெட்டவர்கள் என்பதை மிக நன்றாக துல்லியமாக ஆராய்ந்த பின்னரே பலன்களைத் தெளிவாகச் சொல்ல முடியும் என்பது தெரிகிறது.

1 கருத்து: