வியாழன், 9 பிப்ரவரி, 2012

ஜோதிடப் பாடங்கள் பகுதி 1.ஜோதிட சாஸ்திரம் என்பது மிகமிக நுட்பம் வாய்ந்தது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்னென்ன விஷயங்களை அவன் கடந்து வந்திருப்பான், என்னென்ன விஷயைங்களை அவன் அனுபவிக்கப் போகிறான் என்று மிக அற்புதமாக இந்த சாஸ்திரமானது அவரவர் ஜாதக ரீதியாக உண்மையை எடுத்துரைக்கும். இங்கே ஜோதிட விஷயங்களைப் பற்றிய மிக முக்கியமான அடிப்படை விஷயங்களைப் பற்றிக் கூறுகிறேன்.     ஜோதிட சாஸ்திர ரீதியாக 12 (பன்னிரெண்டு ராசிகள் உண்டு. அவையாவன:
 1. மேஷம்,
 2. ரிஷபம்,
 3. மிதுனம்,
 4. கடகம்,
 5. சிம்மம்,
 6. கன்னி,
 7. துலாம்,
 8.விருச்சிகம்,
 9. தனுசு,
10. மகரம்,
11. கும்பம்,
12. மீனம்.   
ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்கள் உண்டு. அவையாவன: சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியோர். 12 (பன்னிரெண்டு) ராசிகளுக்கும் இந்த ஒன்பது கிரகங்களே அதிபதிகளாக வருகிறார்கள்.  
மேஷம் - செவ்வாய்
ரிஷபம் - சுக்கிரன்
மிதுனம் - புதன்
கடகம் - சந்திரன்
சிம்மம் - சூரியன்
கன்னி - புதன்
துலாம் - சுக்கிரன்
விருச்சிகம் - செவ்வாய்
தனுசு - குரு
மகரம் - சனி
கும்பம் - சனி 
மீனம் - குருஜோதிட சாஸ்திர்த்தில் இந்த ஒன்பது கிரகங்கள் போக 12 ராசியிலும் 27 (இருபத்தியேழு) நட்ச்த்திரங்கள் இடம் பெறுகின்றன. அவையாவன: 
நட்சத்திரங்கள் விவரம்
இந்த இருபத்தியேழு நட்சத்திரங்களையும் நன்கு மனதில் இருத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதே போல் திதிகள் 15 (பதினைந்து) இருக்கின்றன. அதாவது இவை ஜாதகத்தில் அதாவது 12 ராசிகளில் இடம் பெறவில்லை. ஜோதிட சாஸ்திரத்திற்கு முக்கியமாகப் பஞ்சாங்கம் தேவை. இந்த பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களைக் கொண்டது. அவையாவன:  வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்பவையாகும். இதில் மேலே குறிப்பிட்டிருப்பது 27 நட்சத்திரங்கள் ஆகும். இங்கே கீழே குறிப்பிட்டிருப்பது 30 (முப்பது) திதிகள் ஆகும். 
ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்கள்தான் வாரம் ஆகும்.  திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெள்ர்ணமி வரை உள்ள பதினைந்து நாட்களும், தேய்பிறைப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து நாட்களும், அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும்.  திதியில் பாதி கரணம். அதாவது திதி என்பது ஆகாயத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம். யோகம் என்பது ஆகாயத்தில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்லும் மொத்த தூரம். ஒரு ஜாதகம் கணிதம் செய்வதற்கு மேலே கூறிய அனைத்து விவரங்களும் தேவை. முக்கியமாக ஒரு குழந்தை பிறந்த ஊர், பிறந்த வருடம், தேதி, மாதம், பிறந்த நேரம் இவை இருந்தால்தான் அந்தக் குழந்தையின் ஜாதகத்தை கணிதம் செய்ய முடியும். ஒரு மனிதன் பிறக்கும் போது அதாவது அந்த மனிதனது ஜனன நேரத்தில் மேலே கூறிய 12 ராசிகளும், அவற்றில் இடம் பெற்றிருக்கும் 9 கிரகங்களும்,  இந்த கிரகங்கள் நிற்கும் 27 நட்சத்த்ரங்களுமே அந்த மனிதனின் வாழ்க்கையை நடத்திச் செல்கின்றன. ஒருவன் நல்ல பெற்றோருக்குப் பிறப்பானா? அவர்கள் மூலமே வளர்க்கப் படுவானா?  அல்லது யார் மூலமாவது தத்துப் பிள்ளையாக வளர்க்கப் படுவானா? அவனது படிப்பு நிலைகள் திருப்திகரமாக இருக்கிறதா? அல்லது அவன் படிப்பில் தடைகள் உண்டா? வாழ்க்கையில் முன்னேறுவானா? அல்லது கீழ் நிலையிலேயே உழல்வானா? நல்லதொரு திருமண வாழ்க்கை அமையுமா? அல்லது திருமணத்தில் தோல்வியா? ஒரு மனைவியுடன் வாழ்வானா? அல்லது பல தாரங்கள் உண்டா? அரசு அல்லது தனியார் கம்பெனிகளில் வேலை பார்ப்பானா? அல்லது சொந்தத் தொழில் செய்வானா? தொழிலில் மேன்மை உண்டா? அல்லது தோல்வி ஏற்படுமா? அல்லது எந்தத் தொழிலும் இல்லாமல் வீணே கால்ம் கழிப்பவனா? தன் பிள்ளைகளுக்கு நல்லதொரு தந்தையாக வாழ்வானா? அல்லது பிள்ளைகளால் வெறுக்கப் படக் கூடிய வாழ்வு வாழ்வானா? பிள்ளைகளின் ஆதரவு உண்டா? இல்லையா? என்பன யாவுமே அவனது ஜாதகத்தில் இடம் பெற்றிருக்கும் கிரகங்கள் தனது திசா காலங்களில் அவனை எப்படி வழி நடத்திச் செல்கிறதோ அப்படித்தான் நடக்கும். இது முற்றிலும் உண்மையான விஷயமே. இனி அடுத்த இடுகையில் பாடம் 2ஐப் பார்க்கலாம். 

2 கருத்துகள்: