ஞாயிறு, 17 நவம்பர், 2013

ஜோதிட சூக்சுமங்கள் Part-1.

ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும் போதே இந்த ஜாதகம் எப்படிப் பட்டது என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்ளலாம். பல ஜோதிடர்கள் பல விதமான யோகங்களைப் பற்றிக் கூறுகிறார்கள். மேலோட்டமாக யோகங்களை ராசிச் சக்கரத்தைக் கொண்டு மட்டும் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து அதனை அவர்கள் புத்தகங்களில் வெளியிட்டு அதனை அனைவரும் நம்பி நடக்கக் கூடிய விஷயங்கள் யாவும் முன்னுக்குப் பின் முரணாக இருக்கும் போது நொந்து நூலாகி விடுகிறார்கள்.

பொதுவாக ஆயிரக் கணக்கான யோகங்கள் இருக்கின்றன. இங்கே இப்போது தர்ம கர்மாதி யோகத்தின் சூக்சும விஷயத்தைப் பற்றிக் கூறப் போகிறேன்.

தர்ம, கர்மாதி யோகம் என்பதன் விளக்கம்:

ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எண்ணி வரும் 9ம் வீடு பாக்கிய ஸ்தானம் என்றும், தர்ம ஸ்தானம் என்றும் சொல்லப் படுகிறது. அதே போல் 10ம் வீடு கர்ம ஸ்தானம் என்று சொல்லப் படுகிறது.

இந்த தர்ம ஸ்தானத்திற்கு அதிபதி கிரகமும், கர்ம ஸ்தானத்திற்கு அதிபதி கிரகமும் தங்களது வீட்டை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மாற்றிக் கொள்வது அதாவது தங்களது வீட்டைப் பரிவர்த்தனை  செய்து கொள்வது என்பது தர்ம, கர்மாதிபதி யோகத்தைச் செய்யும். அல்லது

இந்த இரு வீட்டிற்கு உரிய கிரகங்களும் இணைந்து தங்களது வீட்டைப்  பார்வையிட்டாலும் தர்ம, கர்மாதிபதி யோகத்தைச் செய்வார்கள்.அல்லது

தர்மாதிபதியும், கர்மாதிபதியும் சுப வீடுகளாகச் சொல்லப்படும் கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் இடம் பெற்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் தர்ம, கர்மாதிபதி யோகத்தைச் செய்வார்கள். அதே போல் 2, 11ம் வீடுகளில் நின்றாலும் ஒருவரை ஒருவர்  பார்த்துக் கொண்டால் இந்த யோகத்தைச் செய்வார்கள்.

ஆனால் இது சுப பலனைச் செய்கின்ற யோகமா? அல்லது அசுப பலனைச் செய்கின்ற யோகமா? என்பதைத்தான் ஆராய வேண்டும்.

ஏனென்றால் ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை அவ யோகத்தையும் யோகம் என்றுதான் சொல்கிறது. இப்போது சூக்சும பலனுக்கு வருவோம்.

ஏற்கனவே சர, ஸ்திர, உபய லக்னங்களுக்கு 11, 9, 7 ஆகிய வீடுகள் பாதக ஸ்தானமாக செயல்படும் என்று கூறியிருக்கிறேன். அதே போல் தர்ம், க்ர்ம அதிபதிகள் கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் தர்ம், க்ர்மாதிபதி யோகத்தைச் செயவார்கள் என்றும் மேலே கூறியிருக்கிறேன்.

ஆகையினால் தர்ம, கர்ம அதிபதிகளில் இருவருமோ அல்லது ஒருவராவதோ இந்த பாதக ஸ்தானங்களில் ஏதெனும் ஒன்றில் இருந்து ஒருவரை ஒருவர் பார்த்தால் அவயோகங்களைத் தனது திசா காலத்தில் அந்த ஜாதகரை அனுபவிக்க வைப்பான் என்பதுதான் உண்மை. இதிலும் இன்னும் சூக்‌ஷும விஷயங்கள் இருக்கின்றன.

ஒரு சர லக்னத்தை எடுத்துக் கொண்டோமேயானால்  அந்த  சர லக்னத்திற்கு 11மிடமான பாதக ஸ்தானத்தில் 9ம் வீட்டுக்குரியவன் அமர்ந்திருப்பதாக வைத்துக் கொள்வோம். உதாரணமாக மேஷ லக்னத்தை எடுத்துக் கொண்டால் இந்த லக்னத்திற்கு 11ம் வீடாகிய கும்ப ராசி பாதக ஸ்தானமாக வரும். இந்த வீட்டில் இந்த மேஷ லக்னத்திற்கு 9ம் வீட்டுக்குரிய குரு பகவான் அமர்ந்திருந்தால் அவர் தனது திசா புக்திக் காலத்தில் என்ன செய்வார்? என்று பார்க்கலாம்.

எப்போதுமே பலன்களைத் துல்லியமாக அதாவது சூக்சுமமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். 11ம் வீடு லாபஸ்தானம். பாக்கியாதிபதி  லாபஸ்தானத்தி
லிருந்து கொண்டு அவனது திசா காலத்தில் அள்ளிக் கொடுக்கப் போகிறார் என்று பகல் கனவு கண்டு இருக்கும் செல்வத்தையும் கோட்டை விட்டு விட்டு அந்த ஜோசியர் சொன்னார், இந்த ஜோசியர் சொன்னார் என்று அகலக்கால் வைத்ததனால் வந்த பலனை அனுபவித்து அல்லல் பட்ட பிறகே, “ஆஹா! நமக்கு நடந்தது யோகமல்ல. அவ யோகம்” என்று நினைத்து நொந்து நூலாகிப் போகிறார்கள்.

இங்கேதான் சூக்சும விஷயத்தை யோசிக்க வேண்டும். 11மிடம் பாதக ஸ்தானமாக வரும் நிலையில் லாப ஸ்தானமாக செயல்படாது. அதே போல் 9ம் வீடு பாதக ஸ்தானமாக வரும் பொழுது பாக்கிய ஸ்தானமாக செயல்படாது. அதே போல் 7மிடம் பாதக ஸ்தானமாக வரும் போது களஸ்திர ஸ்தானமாக செயல் படாது.

11மிடம் லாபத்தைக் கெடுக்கும். 9மிடம் பாக்கியத்தைக் கெடுக்கும். 7மிடம் களஸ்திரத்தைக் கெடுக்கும்.

இன்னும் சூக்சும விஷயங்கள் இருக்கின்றன.  சுப வீடுகள் என்று சொல்லப் படும் திரிகோண ஸ்தானங்கள், கேந்திர ஸ்தானங்கள், லாபம் என்று சொல்லும் 11ம் வீடு, தன வருவாய்க்குரிய 2ம் வீடு இவை யாவுமே சிற்சில சமயங்களில் துன்பத்தைத் தனது திசா காலங்களில் கொடுப்பதுண்டு. அதாவது சுப வீடுகளுக்குரிய கிரகங்கள் பாதக ஸ்தானங்களிலோ அல்லது ருண ரோக ஸ்தானமான 6ம் வீட்டிலோ, அல்லது பாதக வீட்டதிபதியின் நட்சத்திரத்திலோ, அல்லது 6ம் வீட்டதிபனின் நட்சத்திரத்திலோ நின்றால் அவர்களும் கெடு பலன்களையே தனது திசா காலத்தில் செய்வார்கள்.

இப்போது தர்ம கர்மாதி யோகத்தைப் பற்றிப் பார்ப்போம். 9ம் வீட்டுக்குரிய குரு பகவான் 10ம் வீடாகிய மகரத்திலும், 10ம் வீட்டுக்குரிய சனி பகவான் தனுசு ராசியிலும் பரிவர்த்தனை பெற்றிருப்பதாக வைத்துக் கொள்வோம்.

இந்த 9, 10க்குரியவர்கள் பரிவர்த்தனை பெற்று எப்படி தர்ம, கர்மாதிபதி யோகத்தை எப்படிச் செய்வார்கள்?  என்று பார்க்கலாம்.

அதாவது 10ம் வீட்டில் அமர்ந்திருக்கும் குரு பகவான் ராசிச் சக்கரத்தில் மகர ராசியில் நீச நிலை அடைகிறார். இந்த ராசியில் உத்திராடம் 2, 3, 4 பாதங்களும், திருவோணம் 1, 2, 3, 4 பாதங்களும், அவிட்டம் 1, 2 பாதங்களும் இடம் பெறுகின்றன.

இவற்றில் குரு பகவான் மகர ராசியில் ராசிச் சக்கரத்தில் இடம் பெற்று உத்திராடம் 2ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டிலும் அதே நீச நிலையில் மகர ராசியிலேயே இடம் பெற்று பலமிழந்த நிலையில் பாக்கிய ஸ்தானங்களுக்குரிய நன்மைகளையும் 10ம் வீட்டிற்குரிய நனமைகளையும் செய்ய முடியாமல் அந்த வீடுகளுக்குரிய காரக பலன்கள் கெட்டு கெடு பலன்களையே தனது திசா காலத்தில் செய்வார். 

உத்திராடம் 3ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் கும்ப ராசியில் நட்புறவுக்குரிய சனி பகவானின் வீட்டில் நின்று நட்பு நிலை பெறுகிறார்.  முதலில் ராசியில் நீச நிலை பெற்று கெட்டவனாகி கெடு பலனைச் செய்ய வேண்டும் என்று அவர் நினக்கும் போது நவாம்சக வீட்டில் நட்புறவுக்குரிய சனி பகவானின் வீட்டில் நின்றால் நண்பனானவன் “ நீ என்ன செய்ய வேண்டுமோ செய்” என்று இடம் கொடுக்கும் போது குரு பகவான் கெடு பலன்களை குதி போட்டுக் கொண்டு செய்வார். ஆகையால் இவர் நவாம்சக வீட்டில் பகை நிலை பெற்றால்தான் நன்மை உண்டு. இவரால் கெடு பலன்களைச் செய்ய முடியாமல் போகும்.

உத்திராடம் 4ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் தனது ஆட்சி வீடான மீன ராசியில் நின்று நீச பங்க ராஜ யோகம் பெற்று 9, 10ம் வீட்டுக்குரிய காரக பலன்களைத் தனது திசா காலத்தில் சுப பலன்களாக மிகச் சிறப்பாகச் செய்வார்.

இதே போல் திருவோணம் 1ல் நின்றால் நவாம்சக வீட்டில் மேஷ ராசியில் இடம் பெற்று நட்புறவோடு  9, 10ம் வீடுகளுக்குரிய காரக பலன்களை கெடு பலன்களாகச் செய்வார்.

இப்போது இவர் திருவோணம் 2ம் பாதத்திலும், 3ம் பாதத்திலும் ஏதேனும் ஒன்றில் நின்றால் நவாமசக வீட்டில் ரிஷபத்திலோ அல்லது மிதுனத்திலோ இடம் பெறுவார்.  ராசியில் நீசம் பெற்ற இந்த குரு பகவான் நவாமசக வீட்டில் மேலே சொன்ன இருவீடுகளிலும் பகை நிலை பெற்றுசுப பலன்களைச் செய்வார்.

திருவோணம் 4ம் பாதத்தில் இடம் பெற்றால் நவாம்சக வீட்டில் உச்சம் பெற்று நீச பங்க ராஜ யோகம் பெற்றுத் தனது திசா காலத்தில் மிக அதிகமான சுப பலன்களைச் செய்து குபேரனாக்குவான்.
அவிட்டம் 1ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் சிம்ம ராசியில் இடம் பெற்று  நட்புறவு பெறுவதால் அசுப பலன்களையே செய்வான்.

அவிட்டம் 2ம் பாதத்தில் நின்றால் நவாம்சக வீட்டில் கன்னி ராசியில் இடம் பெற்று பகை நிலை பெற்று சுப யோகத்தைச் செய்வான்.

ஆகையினால்தான் யோகம் சுப யோகமா? அவ யோகமா? என்பதை நன்கு ஆராய வேண்டும். 
இனி சனி பகவான் 9ம் வீட்டில் இடம் பெற்று என்ன மாதிரியான பலன்களைச் செய்யப் போகிறார்? என்று பார்க்கலாம்.

21 கருத்துகள்:

 1. கட்க லக்ணம் ,11ம் வீடு பாதக ஸ்தானம் ; அங்கே உள்ள ராகு 11ம் இடமாய் இருந்தாலும் , தீமைதான் செய்யுமா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராகு இருக்கும் இடம் பாழ் என்பார்கள். அதன் படிப் பார்க்கும் போது பாதக ஸ்தானம் பாழ் பெறுவது நன்மையே. ஆனால் அங்கே ராகு நீச நிலை பெறுகிறார். பலமிழக்கிறார் என்று அர்த்தம். ஆகையால் அவரால் பாதக பலன்களைக் கெடுக்க முடியாது. அப்போது பாதக ஸ்தானத்தில் நிற்கும் ராகுவால் கெடு பலன்களைத் தடுக்க முடியாமல் தனது திசா அல்லது புக்திக் காலத்தில் கெடு பலன்களையே செய்வார். ஆனால் நவாம்சக வீட்டில் பகை நிலை பெற்றால் அவரால் கண்டிப்பாக சுப பலன்களைச் செய்ய முடியும்.

   நீக்கு
 2. கன்னி லக்னம் .......சூரியன் புதன் சுக்கிரன் பாதக ஸ்தானத்தில்(மீனம்) .......எனக்கு இருப்பது யோகமா அவ யோகமா?....தற்போது ராகு திசை பிறந்த நாள் 22-03-1989 கன்னி ராசி கன்னி லக்னம் .....உத்திர நட்சத்திரம் இரவு 7-15 பவுர்ணமி யோகம் சூரிய திசை சுக்கிர புத்தியில்(16 நாள் மட்டும்)

  சந்திரன் பகவன் ---லகினம் முதல் வீடு
  உத்திர நட்சத்திரம் -4இல் மீனம் அம்சம்

  சனி பகவன் --4அம் வீடு தனுசு
  மூலம் நட்சத்திரம் 4இல் கடகம் அம்சம்

  ராகு பகவான் -6அம் வீடு கும்பம்
  சதயம் 1இல் -அம்சம் தனுசு

  சூரியன் பகவான் -7அம் வீடு மீனம்
  உத்திரட்டாதி நட்சத்திரம் 2இல் கன்னி அம்சம்

  புதன் பகவான் -7அம் வீடு மீனம்
  உத்திரட்டாதி நட்சத்திரம் 2இல் கன்னி அம்சம்

  சுக்கிரன் பகவான் -7அம் வீடு மீனம்
  உத்திரட்டாதி 1இல் -அம்சம் சிம்மம்

  குரு பகவான் -9அம் வீடு-ரிஷபம்-
  கார்த்திக்கை 4இல் மீனம் அம்சம்

  செவ்வாய் பகவான்-9அம் வீடு -ரிஷபம்-
  ரோகினி 2இல் -ரிஷபம்

  கேது பகவான் -12அம் வீடு சிம்மம்
  மகம் 3இல் மிதுனம் அம்சம்

  அம்மா தாங்கள் இறை அருளால் எமக்கு நல்லதை கூறுங்கள் ......

  பணிவுடன்
  சங்கர் தஞ்சை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சூரியன், சுக்கிரன், புதன் மூவருமே உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நின்று சூரியனில் அஸ்தமிக்கிறார்கள். பொதுவாக பாதக ஸ்தானத்தில் ஒரு கிரகம் 6ம் அதிபதியின் நட்சத்திரத்தில் நின்றாலே பாதக பலன்கள் கெடும். ஆகையால் சூரியன் நல்லவன். ஆனால் அதே நேரம் அவனில் பாதக ஸ்தானத்தில் 6ம் அதிபதியின் நட்சத்திரத்தில் நிற்கும் கிரகம் அஸ்தமிக்கக் கூடாது. அப்படி அஸ்தமித்தால் அவனால் நன்மை செய்ய முடியாது. அப்படி யிருக்கும் போது அவன் நீச நிலை அடைந்தால் நல்லவன். உச்ச நிலை அடைந்தால் கெட்டவன். இன்னும் விஷயம் இருக்கிறது. மேலே நான் சொல்லியதைப் பார்க்கும் போது புதன் நல்லவன் என்றும் சுக்கிரன் கெட்டவன் என்றும் தெரிகிறது. புதன் நல்லவனாகி கன்னியில் அம்சத்தில் இடம் பெற்றிருப்பது சிறப்பு. அதே போல் சுக்கிரன் கெட்டவனாகி தனது பகை வீடான் சிம்மத்தில் இடம் பெற்றிருப்பதும் சிறப்பு. எனவே இவர்கள் யாவரும் பாதக ஸ்தானத்தில் இடம் பெற்றாலும் இவர்களால் உங்களுக்கு நன்மையே. சூரியனில் அஸ்தமித்ததால் இவ்வளவு சூக்சும விஷயங்களை ஆராய்வதால் இவர்கள் நல்லவர்களாகிறார்கள். ஆனால் சூரியன் அங்கு இல்லா விட்டால் அதன் பலன் வேறாக அமைய வாய்ப்புண்டு.

   நீக்கு
 3. லக்கனம் விருச்சிகம் , மகரத்தில் கேது,மிதுனத்தில் சூரியன் புதன் செவ்வாய் ,கடகத்தில் சுக்கிரன் ராகு ,கன்னியில் குரு சனி ,துலாமில் சந்திரன்.இந்த ஜாதகத்தில் எதாவது யோகம் உள்ளதா? தற்போது புதன் தசை நடக்கிறது ....

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. lucknam- simmam in 3rd house-Moon-
  in 6-saturn and ragu -
  in7 SUN-
  in 8 Mer &Venus-
  in 10-Mars-
  in 11 -maa-
  in 12-Jup (Guru) Kethu- DoB-05-03-1991-time 6.00pm@ Kovilpatti-Swathi star-Thulam rasi-pl give ur opinion
  in 12

  பதிலளிநீக்கு
 6. பெயர் மகேஸ்வரன் பிறந்த தேதி 23/09/1991 பிறந்த நேரம் இரவு 11.15 பிறந்த இடம் பட்டுக்கோட்டை லக்னம் ரிஷிபம் ராசி மீனம் நட்சத்திரம் புரட்டாதி 4 ம் பாதம் நடப்பு திசை புதன் புத்தி சுக்ரன் என் வாழ்கை எபோது நல்ல இருக்கும் 2ல் கேது 4ல் குரு சுக்ரன் 5ல் சூரியன் செவ்வாய் புதன் 8ல் சனி ராகு 11ல் சந்திரன்

  பதிலளிநீக்கு
 7. பெயர் மகேஸ்வரன் பிறந்த தேதி 23/09/1991 பிறந்த நேரம் இரவு 11.15 பிறந்த இடம் பட்டுக்கோட்டை லக்னம் ரிஷிபம் ராசி மீனம் நட்சத்திரம் புரட்டாதி 4 ம் பாதம் நடப்பு திசை புதன் புத்தி சுக்ரன் என் வாழ்கை எபோது நல்ல இருக்கும் 2ல் கேது 4ல் குரு சுக்ரன் 5ல் சூரியன் செவ்வாய் புதன் 8ல் சனி ராகு 11ல் சந்திரன்

  பதிலளிநீக்கு
 8. சிம்ம ராசி, மேஷ லக்னம் 10ல் குரு அவிட்டம் நட்சத்திரம் 1ம் பாதம் , 8ல் சனி அனுஷம் 3,தனுசில் சூரியன் பூராடம்2, புதன் மூலம்1,சுக்கிரன் பூராடம்1, துலாத்தில் செவ்வாய் ஸ்வாதி4,கேது ஸ்வாதி2, சிம்மதில் சந்திரன் உத்திரம்1,லக்னத்தில் ராகு அஸ்வினி4

  பதிலளிநீக்கு
 9. சிம்ம ராசி, மேஷ லக்னம் 10ல் குரு அவிட்டம் நட்சத்திரம் 1ம் பாதம் , 8ல் சனி அனுஷம் 3,தனுசில் சூரியன் பூராடம்2, புதன் மூலம்1,சுக்கிரன் பூராடம்1, துலாத்தில் செவ்வாய் ஸ்வாதி4,கேது ஸ்வாதி2, சிம்மதில் சந்திரன் உத்திரம்1,லக்னத்தில் ராகு அஸ்வினி4

  பதிலளிநீக்கு
 10. பெயர் , s.நவநீதகிரி dob 19/12/1953 3,40am ரோகினி -ரிஷப ராசி ...துலா லக்னம்
  லக்னத்தில் ....சனி ,,செவ்வாய்
  ௨ ல் சுக் புத்
  4 ல் ராகு
  8 ல் குரு சந்
  10 ல் கேது

  B.com சரியான வேலை இன்றி ஆலய அர்ச்சகர் வேலை {பரம்பரை தொழில் } பார்கிறேன் ..வெளி நாடுகள் சென்று சம்பாதித்தும் இன்னும் கடனில் உள்ளேன் ..எனக்கு விடிவு உண்டா

  பதிலளிநீக்கு
 11. பெயர் , s.நவநீதகிரி dob 19/12/1953 3,40am ரோகினி -ரிஷப ராசி ...துலா லக்னம்
  லக்னத்தில் ....சனி ,,செவ்வாய்
  ௨ ல் சுக் புத்
  4 ல் ராகு
  8 ல் குரு சந்
  10 ல் கேது

  B.com சரியான வேலை இன்றி ஆலய அர்ச்சகர் வேலை {பரம்பரை தொழில் } பார்கிறேன் ..வெளி நாடுகள் சென்று சம்பாதித்தும் இன்னும் கடனில் உள்ளேன் ..எனக்கு விடிவு உண்டா

  பதிலளிநீக்கு
 12. இரண்டாம் அதிபதியோ, இரண்டாம் இடமோ கெட்டுப் போய், புதன் வழுவாக இருக்கும் ஜோதிடரால் தான் இவ்வாறு அசுப பலன்களை ஆர்வத்துடன் விளக்கமுடியும்..
  ஆனால்
  , இது புண்ணியத்திற்க்கு பதில், பாவத்தை உங்களுக்கு சேர்க்க வாய்புண்டு... கவனம்!

  பதிலளிநீக்கு
 13. இரண்டாம் அதிபதியோ, இரண்டாம் இடமோ கெட்டுப் போய், புதன் வழுவாக இருக்கும் ஜோதிடரால் தான் இவ்வாறு அசுப பலன்களை ஆர்வத்துடன் விளக்கமுடியும்..
  ஆனால்
  , இது புண்ணியத்திற்க்கு பதில், பாவத்தை உங்களுக்கு சேர்க்க வாய்புண்டு... கவனம்!

  பதிலளிநீக்கு
 14. நான் பிறந்தது 27-12-1991 சிம்மராசி கும்பலக்னம் உத்திரம்நட்ச்சத்திரம் தற்ச்சமயம் ராகுதிசை நடைபெறுகிறது ராகு பதினொன்றில் (லாபஸ்தானதில்) ராகுவுடன் சூரியன் உள்ளது

  பதிலளிநீக்கு
 15. நான் பிறந்தது 27-12-1991 சிம்மராசி கும்பலக்னம் உத்திரம்நட்ச்சத்திரம் தற்ச்சமயம் ராகுதிசை நடைபெறுகிறது ராகு பதினொன்றில் (லாபஸ்தானதில்) ராகுவுடன் சூரியன் உள்ளது

  பதிலளிநீக்கு
 16. உங்களிடம் ஜாயகம் பார்க்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்

  பதிலளிநீக்கு