சனி, 11 பிப்ரவரி, 2012

ஜோதிடப் பாடங்கள் 2

ஒரு மனிதன் பணக்காரனாகவோ, அல்லது ஏழையாகவோ பிறப்பதும், அல்லது ஒரு ஏழை பணக்காரன் ஆவதும், பணக்காரன் ஏழை ஆவதும் அவரவர் ஜாதக ரீதியாகவே நடைபெறுகின்றன. ஒரு ஜாதகத்தில் 12 ராசிகள் இடம் பெறுகின்றன. இந்தப் ப்ன்னிரெண்டு ராசிகளுக்கும் 9 கிரகங்கள் அதிபதியகிறார்கள்.  கீழே அதன் விளக்கப் படத்தைக் கொடுத்திருக்கிறேன். 
இதே போல் இந்த ஒன்பது கிரகங்களுக்கும்  உரிய வீடுகளைப் பற்றியும் (Houses of Planets) மற்ற வீடுகளில் இருக்கும் போது அவைகளுக்கு உள்ள சக்தியைப் (Power) பற்றியும் உங்களுக்கு அட்டவணையாக்கித் தந்துள்ளேன். அதாவது சக்தி என்பதன் அர்த்தம் என்ன்வென்றால் எந்தெந்த வீட்டில் எந்தெந்த கிரகங்கள் ஆட்சி, உச்சம் போன்ற பலன்களைச் செய்கின்றன? என்ற விளக்கத்தைக் கொடுத்திருக்கிறேன். அதோடு எந்த வீட்டில் பகை, நட்பு என்ற விளக்கத்தையும் கொடுத்திருக்கிறேன். பொதுவாக ஒரு ராசிச் சக்கரத்தில் 12 ராசிகள் உண்டு. இந்த பன்னிரெண்டு ராசிகளில் ஒரு வீடு 'லக்னம்' என்பதே ஆகும்.  இந்த 'லக்னம்' என்பதை ஜோதிடர்கள் ஜாதகங்களில் 'லக்னம்' என்றோ, அல்லது 'ல' என்றோ, அல்லது 'லக்' என்றோ குறிப்பிட்டிருப்பார்கள். இந்த வீட்டையே முதல் வீடாகக் கொண்டு ஜோதிடர்கள் அவரவர்க்குரிய பலன்களைச் சொல்வார்கள். லக்னம் என்றால் என்ன? ஒரு குழந்தை தாயின் வயிற்றிலிருந்து பூமியில் வந்து பிறக்கும் நேரத்தின் அந்த மையப் புள்ளிதான் 'லக்னம்' என்பதாகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது முதலான 9  கிரகங்களும் அந்த 'லக்னம்' என்ற மையப் புள்ளியி லிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கின்றனவோ அதன் படி அந்த ராசிச் சக்கரத்தில் இடம் பெறுவார்கள். 'லக்னம்' இடம்பெறும் வீட்டை 1ம் வீடு என்றும், அதற்கடுத்த வீடுகளை வரிசைக் கிரமமாக எண்ணிப் பார்க்க 12 வீடுகளையும் தெரிந்து கொள்ளலாம். அவற்றில் அதாவது லக்னம் முதல் 12  வீடுகளில் எந்தெந்த கிரகங்கள் எங்கெங்கு இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதற்கேற்ற பலன்களை அந்தந்த கிரகங்களின் திசா காலங்களில் செய்வார்கள். இதனை உதாரண ஜாதகங்களோடு இனி வரும் பாடங்களில் பார்க்கலாம். 

2 கருத்துகள்: