புதன், 8 பிப்ரவரி, 2012

2012 பிப்ரவரி மாத மேஷ, ரிஷப ராசி பலன்கள்

Aries Horoscope    மேஷ ராசி பலன்கள்:-  இந்த ராசி அன்பர்களின் ஜன்ம ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண பாக்கியம், குழந்தை இல்லாதவருக்குக் குழந்தை பாக்கியம், நல்லதொரு தன வருவாய், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுதல், மற்றும் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல், பெரியவர்களின் ஆசி கிட்டுதல், தீர்த்த யாத்திரை செல்லுதல், வேலை இல்லாதவருக்கு வேலை வாய்ப்பு போன்ற விஷயங்களைச் செய்து கொடுப்பார். தந்தையின் மூலம் ஆதாயங்கள் உண்டு. தந்தையின் நிலை உயரும். நோய்வாய்ப் பட்டவர்கள் குணமடைய வாய்ப்புகள் உண்டு. நகைக் கடை வியாபாரிகள் உயர்வு காண்பார்கள். புதன் சஞ்சாரத்தினால் தாய்மாமன், நண்பர்கள் மூலம் இடையூறுகள் உண்டு. கணிதம், எழுத்து, இலக்கியம் சம்பந்தப் பட்டவர்கள் இன்னல்களைக் காண்பார்கள். சுக்கிரனின் சஞ்சாரத்தினால் பெண்கள் உயர்வு பெறுவார்கள். தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். ஜவுளி, பால், அழகு சாதனப் பொருட்கள் ஆக்கம் தரும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் நிகழும். புதிய பொருட்களின் அல்லது சொத்துகளின் சேர்க்கை நிகழும். 2ல் உலவும் கேது அவ்வப் போது சிற்சில இடையூறுகளைக் குடும்பத்தில் ஏற்படுத்திக் கொண்டு இருப்பார். உயர் கல்விப் ப்டிப்பில் நுழைந்தவர்களுக்கு சற்று முன்னேற்றமான காலமாக இது அமையும். மருத்துவச் செலவுகள் உண்டு. தாயின் நிலை கவனிக்கப் பட வேண்டி வரும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். 8ல் உலவும் ராகுவினால் இடையூறுகள் உண்டு. வேற்று மத, மொழி இனத்தவரால் இடையூறுகள் உண்டு. சூரியன் சஞ்சாரத்தால் அரசு அலுவலர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மாதத்தின் மத்தியில் சூரியன் இடம் மாறுவதாலும், புதன் சஞ்சாரத்தாலும் அரசு அலுவலர்களுக்குக் கெடுபிடிகள் அதிகமாகும். இவர்களுக்கு இது சற்று இது சோதனையான காலமாக இது அமையும். மேலிடத்தின் மூலம் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. கோர்ட், கேஸ் விவ்கர்ரங்கள் இழுபறியாகும் நிலை ஏற்படும். எதிரிகள் பலம் பெறுவார்கள். சனியின் சஞ்சாரம் இவற்றிற்கெல்லாம் ஒத்துழைக்கும். எனவே எச்சரிக்கை தேவை. செவ்வாயின் சஞ்சாரத்தினால் தொழில் வலுவடையும். சட்டம், காவல், இராணுவம், நெருப்பு, ஆயுதம் சம்பந்தப் பட்டவர்கள் உயர்வு காண்பார்கள். ரியல் எஸ்டேட் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு வாக்கினால் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இரும்பு, எஃகுச் சாதனங்கள், எண்ணெய் வித்துக்கள் இன்னல்களை உண்டாக்கும். மாணவர்களுக்கு உகந்த காலம்.
Taurus Horoscopeரிஷப ராசி பலன்கள்:-  இந்த மாதம் உங்கள் ஜன்ம ராசியில் கேது சஞ்சாரம் திருப்திகரமாக உள்ளது. ராகுவின் சஞ்சாரம் திருப்திகரமாக இல்லை.  வேற்று மொழி, மத இனத்தவரால் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.  கூட்டுத் தொழில் செய்பவர்கள் இன்னல்களைச் சந்திப்பார்கள். தம்பதியருக்குள் மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆனால் சுக்கிரனின் சஞ்சாரம் திருப்திகரமாக இருப்பதனால் இந்த மனக்கசப்புகள் உடனுக்குடன் நீங்கவும் வாய்ப்புகள் உண்டு.  ஜவுளி, பால், அழகு சாதனப் பொருட்கள் ஆக்கம் தரும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் நிகழும். புதிய பொருட்களின் அல்லது சொத்துகளின் சேர்க்கை நிகழும். பெண்கள் உயர்வு பெறுவார்கள். 4ல் செவ்வாய் உலவுவதால் செய்தொழிலில் திருப்தி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சட்டம், காவல், இராணுவம், நெருப்பு, ஆயுதம் சம்பந்தப் பட்டவர்கள் உயர்வு காண்பார்கள். ரியல் எஸ்டேட் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். ஆனாலும் உடல் நிலை பாதிக்கப் படவோ அல்லது தாயின் உடல் நிலை பாதிக்கப் படவோ வாய்ப்புகள் உண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் நிகழும். புதிய பொருட்களின் அல்லது சொத்துகளின் சேர்க்கை நிகழும். சூரியனின் சஞ்சாரத்தால் அரசு உத்தியோகஸ்தர்களுக்கு அல்ல்து அரசியல்வாதிகளுக்கு இது சோதனையான காலமாகும். புதன் சஞ்சாரத்தினால் கணிதம், எழுத்து, இலக்கியம், பத்திரிகைத் தொழில் மேம்பட வாய்ப்புகள் உண்டு. சனியின் சஞ்சாரத்தினால் அவ்வப்போது உடல் நிலை பாதிக்கப் பட்டால் கூட பின்னர் அவை சரியாகி விடும். சனியின் சஞ்சாரத்தினால் கோர்ட், கேஸ் விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும் அல்லது வெற்றி உண்டாகும். போட்டி, பந்தயங்களில் வெற்றி உண்டு. குரு பகவானின் சஞ்சாரமும் இதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கும். இரும்பு, எஃகுச் சாதனங்கள், எண்ணெய் வித்துக்கள் முன்னேற்றம் கொடுக்கும். மாணவர்களின் நிலை உயரும்.                                                                                                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக