வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

ஜோதிட சூக்சும விஷயங்கள்

ஜோதிட சம்பந்தமாக ஒரு மனிதன் தனது எதிர் காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள நினைத்து ஒரு ஜோதிடரை அணுகும் போது அந்த ஜோதிடர் அவரது ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து அதாவது சூக்சும விஷயங்களை நன்கு ஆராய்ந்து அவரது கடந்த கால விஷயங்களை முதலில் கூறி விட்டார்கள் என்றால் அவர் சொல்லும் எதிர் கால பலன்களின் மேல் வந்தவருக்கு முழுவதுமாக நம்பிக்கை ஏற்பட்டு விடும். நான் இப்படிக் கூறுவதற்குக் காரணம் என்னவென்றால் ஜோதிடர்களின் மேல் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வரும் காரத்தினால்தான். ஆகையால் அந்த சூக்சும விபரங்களைப் பற்றியே எழுத வேண்டும் என்பதே என் எண்ணம். பொதுவாக ஜாதகத்தில் இடம் பெற்றிருக்கும் ராசிகள் பன்னிரெண்டு என்பதும், இடம் பெற்றிருக்கும் கிரகங்கள் ஒன்பது என்பதும், இடம் பெற்றிருக்கும் நட்சத்திரங்கள் இருபத்தேழு என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்தப் பன்னிரெண்டு ராசிகளில் ஒன்பது கிரகங்களும் இருபத்தேழு நட்சத்திரங்களில் எந்தெந்த நட்சத்திரத்தில் நின்று கொண்டு தனது திசா காலத்தில் எவ்விதமான பலனை செய்கின்றன என்பது ஒரு சூக்சும விஷயம். உதாரணமாக என்னிடம் ஜாதகம் பார்க்க வந்த ஒருவருக்கு மேஷ லக்னம். இந்த லக்னத்திற்கு 11ம் வீடாகிய கும்ப ராசியில் சனி பகவான் ஆட்சி நிலையில் அமர்ந்து கொண்டு பலன்களை தனது திசா காலத்தில் செய்து முடித்து அதன் பிறகு அவருக்கு புதன் திசா காலம் நடக்கும் தறுவாயில் என்னிடம் வந்தார். அவரது ஜாதகத்தை ஆராய்ந்த போது அவரது சனி திசா காலம் அவரை மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாக்கியிருக்கும் என்று தெரிய வந்தது. அதைப் பற்றி அவரிடம் கேட்ட பொழுது அவர் என்னிடம், 'எப்படி இவ்வாறு கூறுகிறீர்கள்' என்று கேட்டார். அதோடு சில ஜோதிடர்களை அணுகி அதாவது சனி திசா காலம் ஆரம்பித்த சில வருடங்களில் சொந்தத் தொழில் செய்யும் விஷயமாக அவர்களிடம் ஆலோசனை கேட்ட பொழுது அவர்கள் 'சனி பகவான் அவரது ஜாதகத்தில் லாப வீட்டில் இருப்பதால் ஏராளமான லாபத்தை சம்பாதிக்க முடியும். எனவே பேஷாகத் தொழில் தொடங்கலாம்' என்று கூறியதை நம்பி அவரும் தொழில் தொடங்கியிருக்கிறார். ஏகப் பட்ட நஷ்டம். 'ஏன் அந்த ஜோதிடர்களின் வார்த்தை பொய்த்தது' என்று அவர் என்னிடம் கேட்ட போது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஜாதகத்தை நன்கு சூக்சுமமாக ஆராயாததன் விளைவுதான் இது. அப்போது அவரிடம் நான் கூறிய விஷயம் என்னவென்றால் 'ஒரு லக்னத்திற்கு 11ம் வீடு லாப வீடுதான். ஆனால் மேஷ லக்னம் சர லக்னம். சர லக்னங்களுக்கு லாப வீடாகிய 11ம் வீடே பாதக வீடாக இருப்பதனால் அந்த 11ம் வீட்டில் இடம் பெற்றிருக்கும் சனி பகவான் தனது திசா காலத்தில் பாதக விளைவுகளை த்தான் செய்வாரே தவிர நன்மைகளைச் செய்ய மாட்டார்' என்பதுதான். இங்கே நான் ஒரு சிறிய உதாரணம்தான் சொல்லியிருக்கிறேன். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தெரியும். தற்போது நடந்து முடிந்த தேர்த்லில் ஜெயிக்கப் போவது தி.மு.கவா அல்லது அ.தி.மு.கவா என்று பல ஜோதிடர்களும் தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் கூறினார்கள். அதில் ஒரு சில ஜொதிடர்கள் மட்டுமே மிகச்சரியாக அ.தி.மு.க கட்சிதான்வெற்றி அடையப் போகிறது  என்று மிகத் தெளிவாகக் கூறினார்கள்.ஏன் அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள் என்று அவரது ஜாதகத்தை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தால் தெரியும். கீழே தற்போதைய  முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன்.இதுதான் தற்போதைய  முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஜாதகம்.இவருக்கு 24-11-2011 வரை ராகு திசா காலம் நடப்பில் இருந்தது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் தேர்தல் நடந்த சமயமும், தேர்தல் முடிவுகள் வெளி வந்த சமயமும் அவருக்கு ராகு திசையில் செவ்வாய் புக்தி நடந்து கொண்டிருந்தது. ராகுவும், செவ்வாயும் இவருக்கு யோகத்தைக் கொடுப்பவர்கள். ஆகையால் இவரால் வெற்றி அடைய முடிந்தது. அன்றைய கோட்சாரமும் அவருக்கு ஒத்துழைத்தது. இதுதான் அவர் வெற்றி அடையக் காரணம்.

1 கருத்து:

  1. நல்ல கருத்துக்கள் ஆனால் மிதுன லக்னத்திற்கு செவ்வாய் எப்படி நன்மை செய்வர் ?

    பதிலளிநீக்கு